இதெல்லாம் கூடவா வீடியோவா எடுத்து போடுவாங்க.. இரண்டாவது கணவருடன் அமலா பால் வெளியிட்ட முகம் சுளிக்க வைக்கும் வீடியோ..

By Archana on கார்த்திகை 23, 2023

Spread the love

நடிகை அமலா பாலுக்கு பெரிய அளவில் அறிமுகம் தேவையில்லை. ஏனெனில் அந்த அளவிற்கு பிரபலமான மற்றும் சர்ச்சையான நடிகையும் கூட. மைனா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் தலைவா படத்தில் நடித்த சமயத்தில் இயக்குனர் ஏ.எல்.விஜய்யுடன் காதலில் விழுந்து அவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இரண்டே ஆண்டுகளில் விவாகரத்தும் பெற்று விட்டார். அதன் பின்னர் பல கிசுகிசுக்களில் சிக்கி வந்தார்.

   

மேலும் பட வாய்ப்புகளும் சரியாக அமையாததால் ஆடை என்ற படத்தில் நிர்வாணமாக நடித்து ஷாக் கொடுத்தார். அதன் பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது காதலரை அறிமுகம் செய்து வைத்த அமலா பால் அடுத்த சில நாட்களிலேயே அவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். தற்போது இந்த புதுமண தம்பதிகள் ஹனிமூன் சென்றுள்ளனர். இந்நிலையில் தனது காதல் கணவரை கட்டிப்பிடித்து லிப் லாக் கொடுக்கும் வீடியோவை அமலா பால் வெளியிட்டுள்ளார்.

   

 

இதனை பார்த்த பலரும் அவரை விமர்சனம் செய்து வருகிறார்கள். திருமணம் முடிந்து விட்டது என்பதற்காக எதை வேண்டுமானாலும் வீடியோ எடுத்து போடலாமா? இதெல்லாம் உங்களின் ப்ரைவசி சம்பந்தப்பட்ட விஷயம் இப்படி பொதுவெளியில் இதுபோன்ற வீடியோக்களை போடலாமா என விளாசி வருகிறார்கள். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Jagat Desai (@j_desaii)