தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் அமலா பால் சிந்து சமவெளி படத்தின் மூலம் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு மைனா படம் அமலாபாலை பிரபலமாக்கியது. அமலாபால் முன்னணி நடிகர்களான விஜய், தனுஷ், சூர்யா, உள்ளிட்டோரும் இணைந்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு இயக்குனர் ஏ எல் விஜயை அமலாபால் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2016-ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். பின்னர் படங்களில் அமலாபால் பிசியாக நடிக்க ஆரம்பித்தார். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
கடைசியாக பிரிதிவிராஜ் அமலாபால் நடிப்பில் ரிலீசான ஆடுஜீவிதம் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தனது நெருங்கிய நண்பரான ஜெகத் தேசாய் என்பவரை அமலா பால் திருமணம் செய்து கொண்டார். சில நாட்களில் தன் கர்ப்பமாக இருப்பதையும் அமலபால் அறிவித்தார்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அமலாபால் தனது கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவார். இந்த நிலையில் கர்ப்பிணியாக இருக்கும் அமலா பாலுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் வளைகாப்பு நடைபெற்றது. இப்போது நிறைமாத கர்ப்பிணியான அமலாபால் பேபி காம் டவுன் பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளி குவித்து வருகின்றனர்.
View this post on Instagram