இயக்குனராக உருவெடுத்த அல்வா வாசு காமெடியனாக நடித்தது ஏன்..? இவர் வாழ்க்கையில் இப்படியொரு சோக கதையா..?

By Soundarya on கார்த்திகை 15, 2024

Spread the love

பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் அல்வாவாசு. ரஜினிகாந்த் உடன் ஒரு படத்தில் நடித்திருக்கிறார். சத்யராஜ் உடன் அமைதிப்படை படத்திலும் நடித்த காட்சிகள் பெருமளவில் பேசப்பட்டது. 900 க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். இயக்குனர் மணி வண்ணனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். அல்வா வாசு குடும்பத்தோடு மதுரையில் வசித்து வந்தார். அவருக்கு ஆறு மாதங்களுக்கு முன்பாக திடீரென்று உடலில் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சில வருடங்களுக்கு முன் உயிரிழந்தார்.

Alva Vasu,பிரபல நகைச்சுவை நடிகர் கவலைக்கிடம்: துயரத்தில் அவரது மனைவி! -  actor alva vasu in critical condition - Samayam Tamil

   

இவருக்கு அமுதா என்ற மனைவியும் கிருஷ்ண ஜெயந்திக்கா என்ற மகளும் உள்ளனர். எப்போதுமே வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காமெடியன்ளுக்கு பின்னால் ஒரு சோகம் ஒளிந்து இருக்கும். காமெடி நடிகர் அல்வா வாசுவின் வாழ்க்கையில் அப்படி ஒரு சோகம் இருக்கிறது. இவருடைய சொந்த ஊர் மதுரை. ஏழ்மையான குடும்பம் உணவுக்கு திண்டாட்டமான நிலைமைதான். இருப்பினும் இந்த அன்றாட சோக மேகங்கள் வாசுவின் இளமை காலத்தை பாதிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

   

கடைசி வரை கும்பல் காமெடியனாகவே வாழ்ந்து மறைந்த "அல்வா" வாசு... இதுதான்  சினிமா! | Alwa Vasu's unknown facets - Tamil Oneindia

 

வாசு தன்னுடைய நண்பர்களோடு சுற்றித்திரிந்தாலும் படிப்பில் கெட்டிக்காரர். இசையில் ஆர்வம் அவருக்கு அதிகம். கிடார் மீது ஆசை கொண்டு கிடார் வாசிக்க பயின்றார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் எம் காம் படிக்கும்போது மியூசிக் என்றால் வாசு தான் என்று கல்லூரியில் அவர் புகழ் பாடுவார்கள். அந்த அளவிற்கு மியூசிக் மீது காதல் கொண்டுள்ளார். இதனை அடுத்து சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு சென்று இருக்கிறார்.  அங்கு பலரும் இவரை ஏளனம் செய்துள்ளார்கள். ஆனாலும் தான் வாழ்ந்தாலும், வீழ்ந்தாலும் இந்த சினிமாவில் தான் இருப்பேன் என்பதில் உறுதியாக இருந்துள்ளார் வாசு. அதன் பிறகு தான் இயக்குனர் மணிவண்ணனிடம் உதவியாளராக சேர்ந்துள்ளார்.

வடிவேலுவின் மிரட்டல்… அல்வா வாசுவின் மரணம்… குடியிலிருந்து மீண்ட நடிகர்  முத்துக்காளை உருக்கம்

இசையமைக்க வேண்டும் என்ற கனவு படிப்படியாக இயக்குனராக வேண்டும் என்ற கனவையும் சேர்த்து விதைத்துள்ளது. அதனை அடுத்து பல ஒன்லைன்களை எழுதினார். பல சீன்களை பிடித்தார். அன்று இருந்த பல ஆயிரம் உதவி இயக்குனர்கள் பட்டியலில் கவனிக்கப்படும் மனிதராகவும் வாசு வலம் வந்தார்.அவருடைய சினிமா பயணம் இலக்கை நோக்கி தொடர்ந்தாலும் சாப்பாட்டிற்கு கொஞ்சமாவது பொருளாதாரம் வேண்டும் என்பதால் காமெடியனாக துணை நடிகனாக தன்னுடைய திரை பயணத்தை தொடர்ந்தார். அப்படித்தான் வடிவேலுவுடன் நட்பு கிடைத்தது. பல படங்களிலும் அவரோடு நடித்தார். கருப்புசாமி குத்தகைதாரர், எல்லாம் அவன் செயல் போன்ற பல படங்களில் வடிவேலு சேர்ந்து பட்டையை கிளப்பினார்.