ஜாமினில் வெளிவந்த அல்லு அர்ஜுனை கட்டிப்பிடித்து கண்கலங்கிய மனைவி மற்றும் பிள்ளைகள்.. உருக வைக்கும் வீடியோ..!

By Nanthini on மார்கழி 14, 2024

Spread the love

அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சுகுமாரின் இயக்கத்தில் உருவான புஷ்பா 2 திரைப்படம் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி வெளியானது. இந்த திரைப்படம் வெளியானதற்கு முதல் நாள் ஹைதராபாத்தில் சந்தியா திரையரங்கில் முதல் காட்சியை காண அல்லு அர்ஜுன் வந்தபோது ஏற்பட்ட ரசிகர்களின் கூட்ட நெரிசலில் சிக்கி 39 வயது ரேவதி என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விவகாரத்திற்கு வருத்தம் தெரிவித்திருந்த அல்லு அர்ஜுன் அந்த குடும்பத்திற்கு 25 லட்சம் நிதி உதவியும் அறிவித்திருந்தார்.

   

இந்த சம்பவத்தால் தெலுங்கானா போலீசார் அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் நேற்று காலை அல்லு அர்ஜுனை கைது செய்தனர். காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்ற அவர்கள் பிறகு அல்லு அர்ஜுன் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்ற நிலையில் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் உயர்நீதிமன்றம் அல்லு அர்ஜுனுக்கு பிணை வழங்கி உத்தரவிட்டது. இருப்பினும் ஆவணங்கள் கிடைப்பது தாமதமானதால் அல்லு அர்ஜுன் நேற்று இரவு சிறையில் இருந்தார்.

   

 

இந்நிலையில் இன்று காலை 7 மணிக்கு மத்திய சிறையில் இருந்து அல்லு அர்ஜுன் வெளியே வந்தார்.  நேற்று அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டபோது அவருடைய மனைவி கண்ணீர் விட்டு அழுத நிலையில் அல்லு அர்ஜுன் தன்னுடைய மனைவிக்கு முத்தம் கொடுத்து விட்டு ஆறுதல் கூறி சென்றார். இப்படியான நிலையில் இன்று காலை சிறையில் இருந்து நடிகர் அல்லு அர்ஜுன் வெளியே வந்ததும் அவருடைய மனைவி மட்டுமல்லாமல் பிள்ளைகள் அனைவரும் அல்லு அர்ஜுனை கட்டி அணைத்து கண்ணீர் விட்டு அழுதனர். அனைவரையும் உருக வைக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.