விஜய், ஷாருக்கானை ஓரம் கட்டி முதலிடத்தை பிடித்த அல்லு அர்ஜுன்.. புஷ்பா 2 படத்துக்கு எத்தனை கோடி சம்பளம் வாங்கினார் தெரியுமா..?

By Nanthini on கார்த்திகை 16, 2024

Spread the love

தென்னிந்திய சூப்பர் ஸ்டாராக ரசிகர்கள் மனதில் நிற்கும் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் புஷ்பா 2. இந்த படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்தத் திரைப்படம் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புஷ்பா தி ரூல் படத்தின் முதல் பார்வை இந்த ஆண்டு வெளியானதில் இருந்தே படம் குறித்து பார்வையாளர்கள் மனதில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. சமீபத்தில் படத்தின் போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதில் அல்லு அர்ஜுன் வித்தியாசமான தோற்றத்தில் இருந்தார்.

புஷ்பா 2' படத்தின் ரிலீஸ் தேதியை உறுதியானது | 'Pushpaa 2' release date  confirmed

   

இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் டிக்கெட் விண்டோவில் படம் பெரும் வசூலை ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் ரிலீசுக்கு முன்பே பல கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதாவது புஷ்பா 2 திரைப்படம் ரிலீஸ் க்கு முந்தைய வியாபாரத்தில் 1085 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. புஷ்பா 2 அதிக வசூலை அதன் திரையரங்கு உரிமைகள் மூலம் ஈட்டி உள்ளது.

   

Pushpa 2: Release Date of Pushpa 2 - The Rule..

 

அதன் திரையரங்கு உரிமை 600 கோடிக்கு விற்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக தெலுங்கு மாநிலத்தில் மட்டும் புஷ்பாட்டு திரையரங்கு உரிமை 400 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் 100 கோடியும் வெளிநாடுகளில் 125 கோடியும் வசூலித்துள்ளது. அதேசமயம் திரையரங்கு அல்லாத உரிமை 425 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. Netflix 275 கோடிக்கும், தொலைக்காட்சி உரிமை 85 கோடி, இசை 65 கோடிக்கும் விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. புஷ்பா 2 திரைப்படம் சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது.

விஜய், ஷாருக்கானை ஓரங்கட்டிய அல்லு அர்ஜுன்.. புஷ்பா 2 படத்திற்காக வாங்கிய  சம்பளம் இத்தனை கோடியா.! - Cinemapettai

இந்த நிலையில் இப்படத்தில் நடிக்க அல்லு அர்ஜுனுக்கு 300 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய் கோட் படத்திற்காக 200 கோடி சம்பளம் வாங்கி இருந்த நிலையில் அவருடைய கடைசி படமான தளபதி 69 திரைப்படத்திற்கு 270 கோடி சம்பளம் வாங்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. அதனைப் போலவே விஜய்க்கு அடுத்ததாக ஷாருக்கான் 250 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார் என கூறப்பட்ட நிலையில் தற்போது இவர்கள் இருவரையும் ஓவர் டேக் செய்து அல்லு அர்ஜுன் முதல் இடத்தை பிடித்துள்ளார். இதன் மூலம் அதிக சம்பளம் வாங்கும் இந்திய நடிகர்களின் பட்டியலில் அல்லு அர்ஜுன் தான் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார்.