‘ஜவான்’ படத்தின் மெகா ஹிட் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் அட்லீ, தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுனை வைத்து இயக்கி வரும் ‘ராக்கா’ திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் சில பிரச்சனைகள் எழுந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிக பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரிக்கும் ‘ராக்கா’ திரைப்படத்தில் அல்லு அர்ஜுனுடன் ராஷ்மிகா மந்தனா, தீபிகா படுகோனே, மிருணாள் தாகூர் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறது. அண்மையில் ஒரே நேரத்தில் 37 பேரை மோஷன்-கேப்சர் செய்து கின்னஸ் சாதனை படைத்த இப்படத்தின் படப்பிடிப்பு இதுவரை 35 சதவீதம் நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில், இயக்குநர் அட்லீ படப்பிடிப்பின் போது அடிக்கடி இடைவெளி விடுவதாகவும், அவ்வப்போது கதையில் பல மாற்றங்களைச் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் அமைதியாகப் பொறுத்துச் சென்ற அல்லு அர்ஜுன், தற்போது படப்பிடிப்புத் தாமதமாவதால் அட்லீ மீது அப்செட்டிலும் டென்ஷனிலும் இருப்பதாகப் படக்குழுவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் படம் எந்தவித தடங்கலும் இன்றி முழுமையாக முடிவடையுமா என்ற கேள்வி எழுந்துள்ளதால் இச்செய்தி இணையத்தில் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.
