புஷ்பா-2 திரைப்படம் டிசம்பர் ஐந்தாம் தேதி ரிலீசாக உள்ளது. இதன் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது . இறுதிக்கட்ட படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் பின்னணி இசையில் ஒரு குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது புஷ்பா 1 படத்தின் முதல் பாகத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்தார். அதற்காக அவர் தேசிய விருதையும் பெற்றிருந்தார்.

இந்த நிலையில் இரண்டாம் பாகத்திற்கும் அவர் இசையமைத்தது அல்லு அர்ஜுனுக்கு பிடிக்கவில்லையாம் . இதனால் தொடர்ந்து குழப்பங்கள் நீடித்து வருவதாக கூறப்படுகிறது. பொதுவாக டிசம்பர் 5ஆம் தேதி புஷ்பா 2 படம் வெளியாக உள்ள நிலையில் இறுதி கட்ட படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே இயக்குனருக்கும் அல்லு அர்ஜுனுக்கும் சில பிரச்சினைகள் ஏற்பட்ட நிலையில் தற்போது ஏற்பட்ட பிரச்சனைக்கும் அதுதான் காரணமாக என்பது தெரியவில்லை. இதனை தொடர்ந்து தற்போது தமன் மற்றும் காந்தார பட இசையமைப்பாளர் அஜினீஷ் கைக்கு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இந்த தகவல் உறுதியாக தெரியவில்லை. படத்திற்கு மூன்று பேர் இசையமைப்பாளர்கள் அல்லது தமனும் அஜனீஷும் இணைந்து இசையமைப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. இதனால் தேவி ஸ்ரீ பிரசாத் ரசிகர்கள் சோகத்தில் உள்ள நிலையில் இந்த விஷயம் பட ரிலீஸ் தேவதையை பாதிக்குமா என்ற .கேள்வியும் தற்போது ஏற்பட்டுள்ளது
