புதுச்சேரி அரசியலில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள விரிசல், தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் அமைச்சரவை அமைப்பதில் துணை முதல்வர் (DCM) பதவியை பாஜக கட்டாயமாகக் கோருவதோடு, அதிகப்படியான அமைச்சரவை இடங்களையும் கேட்டு அழுத்தம் கொடுத்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு வலுசேர்க்கும் விதமாக, வெற்றி வாய்ப்புள்ள சுயேச்சை வேட்பாளர்கள் சிலருடன் பாஜக ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தி வருவது முதலமைச்சர் ரங்கசாமி தரப்பை கடும் அதிருப்தியிலும் கொந்தளிப்பிலும் ஆழ்த்தியுள்ளது.
பாஜகவின் இந்த ‘செக்’ வைக்கும் அரசியலை முறியடிக்க, ரங்கசாமி ஒரு அதிரடி முடிவாகத் தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கைகோர்த்துப் புதிய ஆட்சி அமைக்கத் திட்டமிட்டு வருவதாகத் தனியார் நாளிதழ் வெளியிட்ட செய்தி, புதுவை அரசியல் களத்தில் ஒரு புதிய திருப்பத்தை உருவாக்கியுள்ளது.
