தவெக கூட்டணியில் இருந்து விசிக விலகல்?….. திருமாவளவன் பரபரப்பு அறிவிப்பு….. அதிர்ச்சியில் CM விஜய்….!

By Nanthini on ஐப்பசி 12, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகம் கூட்டணியில் பாமக இணைவதற்கு அன்புமணி ராமதாஸ் துணை முதலமைச்சர் பதவி கோரியதாக வெளியான தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாமக இடம்பெறும் கூட்டணியில் விசிக இடம்பெறாது என்று விசிக தலைவர் திருமாவளவன் திட்டவட்டமாக அறிவித்துள்ளது தவெக தலைவர் விஜய்க்குப் பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது.

முன்னதாக தவெக உருவாக்கிய சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் பின்னணியில் திருமாவின் வழிகாட்டுதல் இருப்பதாகப் பேசப்பட்ட நிலையில், தற்போது ஒரே மாதத்திற்குள் அவர் விடுத்துள்ள இந்த அதிரடி எச்சரிக்கை தவெகவின் தேர்தல் கணக்குகளை மாற்றுவதுடன், தமிழ்நாட்டில் புதிய அரசியல் திருப்பங்களையும் ஏற்படுத்தியுள்ளது.