தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடும்போது 2026 சட்டமன்றத் தேர்தல் பல திருப்பங்களை எதிர்கொண்டு வருகின்றது. குறிப்பாக விஜயின் அரசியல் வருகை என்பது பலரையும் கதி கலங்க வைத்துள்ளது. விஜய்க்கு கட்சி ஆரம்பித்தது முதலே மக்கள் மத்தியில் ஆதரவு கூடிக் கொண்டே செல்கிறது. விஜய்க்கும் அவருடைய ரசிகர்களுக்கும் அரசியல் அனுபவம் இல்லை என்று விமர்சனம் அனைவராலும் முன்வைக்கப்பட்டாலும் இதனை முறியடிக்கும் வகையில் 50 ஆண்டுகால அரசியல் அனுபவம் வாய்ந்த நபரான செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்து விஜய்க்கு பலத்தை கூட்டினார். இவர் கட்சியில் இணைந்த கையுடன் இன்னும் சில முக்கிய அமைச்சர்கள் விஜய் கட்சியில் சேர உள்ளனர். அதற்கான பணிகளை நானே மேற்கொள்வேன் என்று கூறி பரப்பரப்பை கிளப்பினார்.
இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக வெற்றிக்கழக ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், எங்கள் கட்சித் தலைவர் மலேசியா சென்று இருந்தார். உலக நாடுகள் திரும்பிப் பார்க்கும் அளவுக்கு உருவாக்கப்பட்டிருந்தது மலேசியா நிகழ்ச்சி. மலேசியாவில் பிரதமர்கள் மற்றும் குடியரசு தலைவர்களுக்கு மட்டும்தான் ரோடு ஷோ அனுமதி வழங்கப்படும். ஆனால் விஜய்க்கு ரோடு சூ அனுமதி வழங்கி உள்ளது. இளம் வயது 18 முதல் பெண்கள் மற்றும் பெரியவர்கள் வரை விஜய்க்கு ஆதரவு பெருகி உள்ளது. தமிழகத்தில் உருவாகியுள்ள இந்த மாற்றம் மக்கள் சக்தியோடு இணைந்து முதல்வர் ஆவது நிறைவேறும். காங்கிரஸ் கட்சியுடன் தொடர்ந்து கருத்துக்கள் பரிமாறப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு தலைவரும் ஒவ்வொரு கருத்துக்கள் உள்ளன. பொதுவாக ஒரு புதிய இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. எங்களைப் பொறுத்தவரை நாங்கள் தெளிவாக இருக்கிறோம். விஜயை முதல்வராக ஏற்றுக் கொள்பவர்கள் மட்டும்தான் கூட்டணியில் இணைய முடியும். பொறுத்திருங்கள், ஜனவரி முதல் வாரத்தில் அத்தனையும் தெரியும், எல்லோரும் வாழ வேண்டும், எல்லோருக்கும் வேலை கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
