2026 சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி?… சற்றுமுன் முடிவை அறிவித்தார் டிடிவி தினகரன்…!

By Nanthini on மார்கழி 15, 2025

Spread the love

தஞ்சையில் அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, 2026 சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் 4 முனை போட்டி ஏற்படும். எங்கள் தலைமையில் கூட்டணி கிடையாது. ஆனால் வெற்றி கூட்டணியில்தான் இடம்பெறுவோம். டிசம்பர் 31ஆம் தேதிக்குள் கூட்டணி முடிவாகிவிடும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அது தள்ளிப் போகிறது. கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க அமமுகவிற்கு பிப்ரவரி மாதம் வரை அவகாசம் உள்ளது. 2026 தேர்தலில் நாங்கள் இடம்பெறும் கூட்டணி தான் கட்டாயம் வெற்றி பெறும். எங்களை தவிர்த்து விட்டு எந்த கூட்டணியும் ஆட்சி அமைக்க முடியாது.

யார் துரோகி யார் அப்பாவி என தமிழக மக்களுக்கும் தொண்டர்களுக்கும் நன்றாகவே தெரியும். செங்கோட்டையன் ஒரு மூத்த நிர்வாகி. அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியதை தொடர்ந்து அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதற்கு அவர் மனம் வருந்தியதாகவும் நான் பலமுறை கூறியுள்ளேன். பிறகு அவரே ஒரு முடிவெடுத்து விஜயின் தமிழக வெற்றிக்கலகம் கட்சியில் இணைந்து இருக்கிறார். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று தினகரன் தெரிவித்துள்ளார். தினகரன் யாருடன் கூட்டணி அமைக்க போகிறார் என்பது தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.