விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யை சந்தித்துப் பேசியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபகாலமாக திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய இரு தரப்பிற்கும் இடையே அரசியல் ரீதியாகப் பயணிக்கிறார் என்ற விவாதங்கள் நிலவிவந்த சூழலில், விசிக மாநாட்டில் அவர் தெரிவித்த கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றன.
அந்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தவெகவுடன் இணைந்து பயணிப்பது தொடர்பான விருப்பத்தை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, இன்று முதலமைச்சருடனான இந்தச் சந்திப்பு நடந்துள்ளது. இச்சந்திப்பின்போது, வரும் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு மற்றும் தற்போதைய அரசியல் சூழல்கள் குறித்து இருவரும் நேரடியாக ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.
