அரசு ஊழியர்களின் வேலை – வாழ்க்கை சமநிலையைப் பராமரிப்பதற்காக, அவர்களுக்கு அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்க திரிபுரா மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு முன்னதாக, அங்கு 2 மற்றும் 4-வது சனிக்கிழமைகள் மட்டுமே விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறையாக மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, அரசு ஊழியர்களின் தினசரி வேலை நேரமும் நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேலை நேரமாக இருந்த நிலையில், தற்போது அது திருத்தப்பட்டு காலை 9:30 மணி முதல் மாலை 6 மணி வரை என வேலை நேரம் நீட்டிக்கப்பட்டு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
