“ரயிலில் வந்த காதலி… ஹோட்டலில் காத்திருந்த பிளானிங்”… விடிய விடிய நடந்த கொடூரம்…. ஆறாக ஓடிய ரத்தம்… காதலன் செய்த பகீர் சம்பவம்….!

By Nanthini on புரட்டாதி 14, 2026

Spread the love

சென்னையிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பிய இளம் பெண் ஒருவரை, தவறான சந்தேகத்தின் காரணமாக அவரது காதலனே ஹோட்டல் அறையில் கத்திரிக்கோலால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அசாமில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலம் சோனித்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாலினி குரியா (23) என்ற பெண், சென்னையில் பணிபுரிந்து வந்த நிலையில், தனது இரண்டு தோழிகளுடன் ரயிலில் ரங்கியா ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அவர்களை வரவேற்பதற்காக உடால்குரி மாவட்டத்தைச் சேர்ந்த அவரது காதலன் அபிஜித் கிண்டோ (22) அங்கு வந்துள்ளார். பின்னர், அனைவரும் ரங்கியா ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கியுள்ளனர்.

அன்று நள்ளிரவு மாலினி தங்கியிருந்த அறைக்குச் சென்ற அபிஜித், அவருடன் தகராறில் ஈடுபட்டுத் தான் மறைத்து வைத்திருந்த கத்திரிக்கோலால் அவரை கொடூரமாகத் தாக்கியுள்ளார். மறுநாள் காலை, மாலினி உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சடலமாகத் தகவலறிந்த போலீஸாரால் கண்டெடுக்கப்பட்டார். அதே அறையில் காயங்களுடன் தற்கொலைக்கு முயன்ற நிலையில் இருந்த அபிஜித்தை மீட்ட ரங்கியா போலீஸார், அவருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த பின் கொலை வழக்கில் கைது செய்தனர். மேலும் சம்பவ இடத்திலிருந்து கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்திரிக்கோல் மற்றும் பிற தடயங்களை வல்லுநர்கள் பறிமுதல் செய்தனர்.

   

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், மாலினி வேறு சில ஆண்களுடன் தொடர்பில் இருப்பதாக அபிஜித்துக்கு எழுந்த பலமான சந்தேகமே இக்கொலைக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அபிஜித், மாலினி ஊருக்கு வருவதற்கு முன்பே திட்டமிட்டு இக்கொடூரத்தைச் செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். தற்போது மாலினியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக குவாஹாட்டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், அவருடன் பயணித்த தோழிகளிடமும் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.