தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஹோட்டல்களிலும் பணியாற்றும் உணவு பரிமாறுபவர்கள் மற்றும் உணவு தயாரிப்பவர்கள் உட்பட அனைவருமே தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழக உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதுமட்டுமின்றி தடுப்பூசியை செலுத்திக்கொண்ட பிறகு அனைத்து பணியாளர்களும் மருத்துவ சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும். Enteric காய்ச்சல், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நடைமுறை பின்பற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
