ரூ 78,000 மானியத்துடன் 300 யூனிட் இலவச மின்சாரம்… மத்திய அரசின் சோலார் மின் திட்டம் பற்றிய முழு தகவல்கள் இதோ…

By admin on மாசி 1, 2025

Spread the love

மத்திய அரசு மக்களின் நலனுக்காக அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக பல திட்டங்களை வழங்கி வருகிறது. ஒவ்வொரு வீட்டிலும் மின்சாரம் என்பது மிக முக்கியம். அதே மின்சாரத்தின் கட்டணம் என்பது அதிகமாக வருகிறது என பலர் நினைப்பார்கள். அந்த பிரச்சனையிலிருந்து விடுபட மின்சார கட்டணம் கட்டாமல் சோலார் மின்சாரத்தை பயன்படுத்துவதன் மூலம் நம் பணத்தை பெரிதளவில் சேமிக்க முடியும். அந்த வகையில் மத்திய அரசு வழங்கும் சோலார் மின் திட்டத்தை பற்றிய முழு தகவல்களை பற்றி இனி காண்போம்.

   

மத்திய அரசு பிரதம மந்திரி சூர்யா கர் முப்ட் பிஜிலி யோஜனா என்ற திட்டத்தின் மூலம் சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் ஒவ்வொரு வீட்டிற்கும் என்ற திட்டம் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ளது. அடுத்த மூன்றாண்டுகளில் ஒரு கோடி வீடுகளில் சோலார் பேனல்கள் நிறுவுவதே இந்த திட்டத்தின் நோக்கம். முதல் ஆண்டிலேயே 8, 61,240 வீடுகளில் மேற்கூரை சோலார் அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் சேர்ந்து வீட்டின் கூரைகளில் சோலார் பேனல் படுத்துபவர்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்குவதோடு கடன் உதவியும் வழங்குகிறது மற்றும் சோலார் பேனல்களை நிறுவதன் மூலம் மாதந்தோறும் 300 யூனிட் அளவிற்கு இலவசம் மின்சாரத்தை பெற முடியும்.

   

வீடுகளில் மேற்கூரைகளில் சூரிய எரிசக்திக்கான சோலார் பேனல்களை நிறுவ மத்திய அரசு மானியம் வழங்குகிறது. அந்த வகையில் 2 கிலோ வாட் திறன் கொண்ட பேனலுக்கு 60% மானியமும், இரண்டு முதல் மூன்று கிலோவாட் திறன் கொண்ட சோலார் பேனல்களுக்கு 40 சதவீதம் மானியமும் கிடைக்கிறது. அதாவது ஒரு கிலோவாட் திறன் கொண்ட அமைப்புக்கு ரூபாய் 30,000 மானியமும், இரண்டு கிலோவாட் திறன் கொண்ட சோலார் அமைப்புக்கு ரூபாய் 60,000 மானியமும் 3 கிலோவாட்க்கு ரூபாய் 78,000 மானியமும் கிடைக்கிறது.

 

இந்த திட்டத்தின் மூலம் மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்குவது மட்டுமின்றி சுத்தமான எரிசக்தி பயன்பாட்டை ஊக்குவிக்கவும் இந்த திட்டம் வகுக்கப்பட்டு இருக்கிறது. மத்திய அரசின் இந்த சோலார் மின் திட்டத்தில் சேர்ந்து உங்கள் வீட்டின் மேற்கூரில் சோலார் பேனல் அமைக்க ஒரு முறை செலவு செய்தால் போதும் அதன் பிறகு வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் கிடைப்பதால் மின்சார கட்டணம் என்று தனியாக கட்ட வேண்டிய தேவையே இருக்காது. இதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் மேம்படும் உங்களது பணமும் மிச்சப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.