தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் விஜய் ரசிகர்களுக்கு மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம். இப்படத்தில் தளபதி விஜயுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், மிஸ்கின், அர்ஜுன், கௌதம் மேனன் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று முன்தினம் வெளியான இத்திரைப்படம் சில விமர்சனங்களை சந்தித்தாலும் ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பை பெற்று வருகிறது.. இதுவரை தமிழ் சினிமாவில் எந்த திரைப்படம் செய்யாத வசூல் சாதனையை லியோ திரைப்படம் செய்து காட்டி இருக்கின்றது. இதனால் படக்குழுவினர் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். உலக அளவில் முதல் நாளே 148.5 கோடி வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளது லியோ.
இந்நிலையில், சமீபத்திய பேட்டில் ஒன்றில் பேசிய தயாரிப்பாளர் லலித்குமார், படம் குறித்த பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘லியோ திரைப்படம் ரூ.1,000 கோடி வசூலை நெருங்காது. காரணம் நாங்கள் இந்தி மார்க்கெட்டில் இருந்து அவ்வளவு வசூலை எதிர்பார்க்கவில்லை. படத்தைப் பார்க்க தமிழ்நாட்டிலிருந்து 2 லட்சம் பேர் வெளிமாநிலங்களுக்கு சென்றுள்ளதாக தகவல் கிடைத்தது.
அதிகாலை 4 மணி காட்சிக்கு நிறைய முயற்சி செய்தோம். ஆனால் அது நடக்கவில்லை.’ என்று பேட்டியளித்துள்ளார். அவரின் இந்த பேட்டியானது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தளபதி ரசிகர்கள் லியோ 1000 கோடி வெற்றியை கொண்டாடலாம் என்று நினைத்திருந்த நிலையில் தயாரிப்பாளர் லலித் குமாரின் இந்த பேட்டியானது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.