சொகுசு கப்பலில் நடந்த வெங்கட்பிரபுவின் மது பார்ட்டி.. கும்மாளம் போட்ட பிரபலங்கள்.. அப்போ தளபதி விஜய்யுமா..?

By admin on கார்த்திகை 11, 2023

Spread the love

லியோ படத்துக்கு பிறகு, நடிகர் விஜய் தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் 68 படத்தில் நடித்து வருகிறார். சென்னையில் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், 2ம் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டில் நடந்து வருகிறது. கடந்த 1ம் தேதி நடந்த லியோ படத்தின் வெற்றிவிழாவில் பங்கேற்ற விஜய், அடுத்த நாள் தாய்லாந்து நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு தொடர்ந்து ஆக்ரோஷமான சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

Vijay

   

இந்நிலையில், விஜய் 68 படத்தின் இயக்குநர் வெங்கட்பிரபுவின் பிறந்த நாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக சொகுசு கப்பல் ஒன்றை வாடகைக்கு பிடித்து இயக்குநர் வெங்கட்பிரபு, படக்குழுவினர் அந்த சொகுசு கப்பலில் நடுக்கடலுக்கு சென்று, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என, சரக்கு பார்ட்டியுடன் பிறந்த நாள் விழாவை குதூகலமாக கொண்டாடி இருக்கின்றனர். இதற்காக, வெங்கட்பிரபுவின் நண்பர்கள் குழு சென்னையில் இருந்து தாய்லாந்துக்கு சென்று, விழாவை சிறப்பித்துள்ளனர்.

   

Vijay

 

ஆனால், இந்த சரக்கு பார்ட்டி விழாவில் நடிகர் விஜய் கலந்துக்கொள்ளவில்லை. அவர், அங்குள்ள வழக்கமாக தங்கி ஓய்வெடுக்கும் ஓட்டலிலேயே இருந்துவிட்டார். இந்த தண்ணீ பார்ட்டியில் அவர் பங்கேற்கவில்லை. தமிழகத்தில் விஜய் மக்கள் ஆதரவுடன் மிகப்பெரிய மனிதராக மதிக்கப்படுகிறார். விரைவில் அரசியலுக்கும் வர உள்ளார். இந்நிலையில், இதுபோன்ற சரக்கு பார்ட்டியில் கலந்துக்கொள்வதால் தனது இமேஜ் பாதிக்கப்படலாம் என்ற முன்னெச்சரிக்கையாக, இந்த விழாவில் கலந்துக்கொள்ளாமல் தவிர்த்து விட்டார் நடிகர் விஜய்.