Connect with us

அலைகள் ஓய்வதில்லை ஒரிஜினல் கதை படமாக்கப்பட்டிருந்தா கலவரமே வந்துருக்கும் போல! விபரீதத்தை உணர்ந்து கதையை உல்டாவாக மாற்றிய பாரதிராஜா, அப்படி என்னவா இருந்துருக்கும்?

CINEMA

அலைகள் ஓய்வதில்லை ஒரிஜினல் கதை படமாக்கப்பட்டிருந்தா கலவரமே வந்துருக்கும் போல! விபரீதத்தை உணர்ந்து கதையை உல்டாவாக மாற்றிய பாரதிராஜா, அப்படி என்னவா இருந்துருக்கும்?

 

பாரதிராஜா இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டு வெளிவந்து அமோக வெற்றிபெற்ற திரைப்படம்தான் “அலைகள் ஓய்வதில்லை”. இத்திரைப்படத்தில்தான் கார்த்திக், ராதா ஆகியோர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்கள்.

ஒரு இந்து ஆணுக்கும் கிறுஸ்துவ பெண்ணுக்கும் இடையே ஏற்படும் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இத்திரைப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. எனினும் இத்திரைப்படத்தின் கதை முதலில் வேறு மாதிரி எழுதப்பட்டிருக்கிறது.

   

அதாவது ஒரு இந்து ஆணும் இஸ்லாமிய பெண்ணும் காதலிப்பதுபோல்தான் முதலில் கதையமைத்திருக்கிறார்கள். இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “ஆயிரம் தாமரை மொட்டுக்களே” பாடலில் கூட “இங்கிரண்டு ஜாதி மல்லிகை, தொட்டுக்கொள்ளும் காமன் பண்டிகை, கோவிலிலே காதல் தொழுகை” என்று ஒரு வரி வரும். இதில் இடம்பெற்ற “காதல் தொழுகை” என்ற வார்த்தைகள் இஸ்லாமிய பெண்ணை காதலிப்பது குறித்து எழுதப்பட்டதுதான்.

ஆனால் ஒரு இந்து ஆண் இஸ்லாமிய பெண்ணை காதலிப்பது போல் படம் எடுத்தால் இஸ்லாமிய சமூகத்தில் இருந்து எதிர்ப்புகள் கிளம்புமோ என்ற பயத்தில்தான் ஒரு இந்து ஆண் கிறுஸ்துவ பெண்ணை காதலிப்பது போல் கதையை மாற்றிவிட்டாராம் பாரதிராஜா. எனினும் இத்திரைப்படம் காலத்தைத் தாண்டி நிற்கும் ஒரு கிளாசிக் திரைப்படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top