தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் தற்போது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் மிகவும் பிஸியாக நடித்த வருகிறார். இந்த திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகின்றார். இந்த திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இரண்டு மாதத்திற்குள் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட வேண்டும் என்பதில் தீவிரமாக இறங்கி இருக்கிறார்கள் பட குழுவினர். இந்த நிலையில் திடீர் அறிவிப்பாக நடிகர் அஜித்தின் அடுத்த படத்தின் அறிவிப்பு தொடர்ந்து வெளியாகி வருகின்றது. அதாவது மார்க் ஆண்டனி என்ற ஹிட் திரைப்படத்தை கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன் தான் அஜித்தின் அடுத்த திரைப்படத்தை இயக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லியோ திரைப்படத்தின் ரிலீஸ் அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அந்த அறிவிப்பு வெளியாகாது என கூறியிருக்கிறார்கள். இதில் மற்றொரு டுவிஸ்டாக ஏற்கனவே அஜித்தின் அடுத்த திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கப் போவதாகவும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டு வந்த நிலையில் திடீரென்று அஜித்தின் அடுத்த திரைப்படத்தை ஆதி ரவிச்சந்திரன் இயக்குகிறார் என்று கூறுவது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அறிவிப்பால் சிறுத்தை சிவாவுக்கும் அஜித்துக்கும் ஏதாவது பிரச்சனை இருக்குமோ என்று பலரும் கூறி வருகிறார்கள். இதற்கு உண்மை காரணம் என்னவென்றால் கங்குவா திரைப்படம் இரண்டு பாகமாக வர உள்ளதால் அப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் வரை தள்ளிப் போக வாய்ப்பு இருக்கின்றதாம். அதன் பிறகு கட்டாயம் ஏழு மாதங்கள் தனக்கு பிரேக் வேண்டும் என்று சிறுத்தை சிவா கூறியிருக்கிறார்.

இதனால் தான் அடுத்த திரைப்படத்தை ஆதி ரவிச்சந்திரன் இயக்கப் போகிறார் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் அஜித்தால்தான் நான் இந்த நிலைமைக்கு வந்துள்ளேன் என்று கூறி வர அவரைப் பிடித்து வைத்துக்கொண்டாராம் அஜித். இதுதான் உண்மை காரணம் என்று பத்திரிக்கையாளர் தெரிவித்து இருக்கின்றார்.
