ஐயோ… என்ன கொடுமை இது… 8 மாதக் கடின உழைப்பு வீண்… குப்பைக் காடாக மாறிய அஜ்னார் நதி… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்…!

By Swetha on ஐப்பசி 15, 2026

Spread the love

மத்தியப் பிரதேசத்தில் உள்ள அஜ்னார் நதியை எந்தவொரு அரசு உதவியும் அல்லது நவீன உபகரணங்களும் இல்லாமல், சூர்ய பிரதாப் சிங் என்ற ‘பிட்டு தபாஹி’ என்ற இளைஞர் சுமார் எட்டு மாத காலம் கடுமையாக உழைத்துத் தனியாளாகத் தூய்மைப்படுத்தினார். இந்த உழைப்புக்குப் பலனாக அந்த நதி முற்றிலும் மீட்கப்பட்டு சுத்தமாக மாறியது.

ஆனால், துப்புரவுப் பணி முடிந்து சில வாரங்கள் மட்டுமே ஆன நிலையில், பொதுமக்களின் பொறுப்பற்ற செயலால் அந்த நதி மீண்டும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் குப்பைக் கழிவுகளால் முழுமையாகத் நிரம்பி நாசமாகியுள்ளது. இதைக் கண்டு மனமுடைந்த அவர், தனது எட்டு மாதக் கடின உழைப்பு இப்படி வீணாகிவிட்டதே என்று வேதனை தெரிவித்துள்ளார்.

   

இந்தச் சோகத்திலும் தன் முயற்சியைக் கைவிடாத அவர், தனக்கு நீச்சல் சரியாகத் தெரியாவிட்டாலும் மீண்டும் ஆற்றில் இறங்கித் குப்பைகளை அகற்றத் தொடங்கியுள்ளார். மேலும், இதுபோன்று மீண்டும் குப்பைகள் சேர்வதைத் தடுக்க எத்தகைய செயல்திறன் மிக்க நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று இணையவாதிகளிடம் அவர் ஆலோசனையும் கோரியுள்ளார்.