இந்த அன்புக்கு என்றும் உண்மையாக இருப்பேன்… என் சுயநலத்திற்கு உங்க அன்பை பயன்படுத்தமாட்டேன்… ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து அஜித் அறிக்கை..!!

By Soundarya on ஆவணி 3, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித். இந்த நிலையில் திரைத்துறையில் 33 ஆண்டுகள் நிறைவு செய்த நடிகரும் ரேஸருமான அஜித்குமார் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சினிமா எனும் அற்புதமான பயணத்தி 33 ஆண்டுகளை கடந்துவிட்டேன். ஆனால் இதை கொண்டாடுவதற்காக எழுதவில்லை. எனக்கு எண்களின் மீது நம்பிக்கையில்லை. சினிமாவில் ஒவ்வொரு வருடமும் எனக்கு முக்கியமானது தான். இந்த பயணத்திற்காக முழு மனதுடன் கை கூப்பி நன்றி தெரிவிக்கிறேன்.

இந்த பயணம் எனக்கு எளிதாக இல்லை. இந்த துறைக்கு எந்த பின்புலமும் அல்லது யாருடைய சிபாரிசும்  இல்லாமல் தான் நுழைந்தேன். முழுக்க முழுக்க என் சுய முயற்சியால் மட்டுமே சினிமாத்துறைக்குள் நுழைந்தேன். காயங்கள், மீண்டு வருதல், தோல்வி  மற்றும் அமைதி என வாழ்க்கை என பல வழிகளில் சோதித்தது. ஆனால் நான் தளர்ந்து போகவில்லை. முயற்சி செய்தேன். மீண்டும் வந்தேன். தொடர்ந்து முன்னேறுகிறேன்.

   

   

ஏனெனில் விடாமுயற்சி என்பதை வெறுமனே நான் கற்றுக் கொள்ளவில்லை. அதை பரிசோதித்து அவ்வண்ணமே வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நான் இன்று என்னவாக இருக்கிறேனோ அதற்கு முக்கிய காரணம் என் ரசிகர்கள் அன்பும், ஆதரவும் தான். உங்கள் அன்பை எனது சுயநலத்திற்காகவோ அல்லது தவறாகவோ பயன்படுத்த மாட்டேன்.  இந்த அன்புக்கு என்றும் உண்மையாக இருப்பேன். இந்த அன்பை எப்போதும் இறுகப் பிடித்திருப்பேன்” என்று கூறியுள்ளார்.