#image_title
பாலா தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பணிபுரியும் நடிகர் ஆவார். இவரது குடும்பம் சினிமா பின்புலத்தைக் கொண்டதுதான். இவருடைய தாத்தா அருணாச்சலா ஸ்டுடியோவின் உரிமையாளராக இருந்தார். இவரது தந்தை ஜெயக்குமார் 350 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் ஆவணப் படங்களை இயக்கியிருக்கிறார்.
நடிகர் பாலா அவர்களின் சகோதரரான சிறுத்தை சிவா தென்னிந்திய திரைப்படங்களில் இயக்குனராகவும் ஒளிப்பதிவாளர் ஆகவும் பணியாற்றி வருகிறார். தற்போது சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் கங்குவா திரைப்படத்தில் இயக்கியிருப்பது சிறுத்தை சிவா தான் என்பது குறிப்பிடத்தக்கது.
2003 ஆம் ஆண்டு அன்பு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் பாலா. இந்த படம் பெரிதாக வெற்றி படாவிட்டாலும் இந்த படத்தில் வரும் தவமின்றி கிடைத்த வரமே என்ற பாடல் இன்றளவும் ஹிட் பாடலாகவே இருந்து வருகிறது.
அதற்குப் பிறகு மலையாள சினிமாவில் நடித்து வந்த நடிகர் பாலா 2014 ஆம் ஆண்டு அஜித் குமார் நடிப்பில் வெளியான வீரம் திரைப்படத்தில் அஜித்துக்கு தம்பியாக நடித்திருந்தார். இப்படம் நல்ல விமர்சனங்களை பற்றி வெற்றி பெற்றது.
இவரது தனிப்பட்ட வாழ்க்கையை பார்த்தால் நடிகர் பாலா 2010 ஆம் ஆண்டு பாடகியான அம்ருதா சுரேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா என்ற மகள் இருக்கிறார். எனினும் இவர்கள் 2016 ஆம் ஆண்டு பிரிந்தனர். அதற்குப் பிறகு 2021 ஆம் ஆண்டு டாக்டர் எலிசபத்தை நடிகர் பாலா மணந்தார். இவர்களும் சிறிது காலத்திலேயே பிரிந்து விட்டனர்.
இந்நிலையில் தற்போது நடிகர் பாலாவின் முதல் மனைவியான அம்ருதா இவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். தங்களை வழிப்பறி செய்வதாகவும் தொந்தரவு செய்வதாகவும் புகார் அளித்ததன் பேரில் பாலாவை கேரள போலீசார் கைது செய்தனர். அதற்குப் பிறகு பத்திரிகையாளர் இடம் பேசிய நடிகர் பாலா என்னுடைய சொத்துக்காக தான் இப்படி செய்கிறார்கள் எனவும் எனது பூர்விக சொத்து 250 கோடி ரூபாய் என்னுடைய பங்கு கிடைத்திருக்கிறது. இனி நான் சட்ட ரீதியாக மூன்றாவதாக திருமணம் செய்து வேற எங்கேயாவது சென்று வாழப் போகிறேன் என்று கூறியிருக்கிறார் பாலா. இது கேரளா திரை உலகை பரபரப்பாக ஆக்கியிருக்கிறது.
புதுக்கோட்டை அருகே 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் தலைகுப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்…
ஜப்பான் நாட்டில் உள்ள விலங்கியல் பூங்கா ஒன்றில், பிறந்ததும் தாயால் கைவிடப்பட்டுத் தனிமையிலும் மற்ற குரங்குகளின் தாக்குதலிலும் தவித்து வந்த…
திருவாரூர் மாவட்டம் விளமல் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கீழே கிடந்த சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான…
பஞ்சாப் மாநிலத்தில் பட்டப்பகலில் தனது சிறிய மகளுடன் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த நபரை மர்ம கும்பல் ஒன்று காரில்…
மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் கான்ஸ்டபிளைக் கார் ஒன்றில் அடித்து, போனட்டில் வைத்து 200…
வெளியாகியுள்ள அரசியல் செய்தித் தகவல்களின்படி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பதவியேற்று ஆறு மாதங்களை நிறைவு செய்துள்ள…