தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சூர்யா நடிப்பில் கங்குவா திரைப்படம் உருவாகியுள்ளது. படத்தை இயக்குனர் சிவா இயக்கியுள்ள நிலையில் பிரம்மாண்டமான வரலாற்று பின்னணியில் இந்த படம் உருவாகியுள்ளது. அடுத்த மாதம் 14ஆம் தேதி திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷன்களில் பட குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். படத்தின் ப்ரோமோஷனல் அடுத்தடுத்து மும்பை மற்றும் சென்னை என நடைபெற்று வருகிறது. மும்பை மற்றும் டெல்லியில் சூர்யா உள்ளிட்ட படகு குழுவினர் ரசிகர்களை நேரில் சந்தித்தனர்.
அதேசமயம் சூர்யா தனிப்பட்ட முறையிலும் பல பேட்டிகளை கொடுத்துள்ளார். இந்த படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. மேலும் இரு வேறு கெட்டப்புகளில் சூர்யா படத்தில் நடித்துள்ளார். வரலாற்று பின்னணியில் படம் உருவாகியுள்ள நிலையில் இந்த காட்சிகள் படத்தில் மொத்தமாக 2 மணி நேரங்கள் அமைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதனால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நிலையில் சூர்யா சமீபத்தில் அளித்த பேட்டியில், தான் நடிகர் அஜித்தை சமீபத்தில் சந்தித்ததாகவும், அவர் தன்னிடம் இப்போ தெரியுதா நான் ஏன் சிவாவை விடவில்லை என்று கேட்டதாகவும் சூர்யா பாராட்டு தெரிவித்துள்ளார். நடிகர் அஜித்துடன் மிகச் சிறப்பான படங்களை சிவா கொடுத்துள்ளதாகவும் சூர்யா கூறியுள்ளார். அவருக்கு தியேட்டர் மூமென்ட்கள் சிறப்பாக வரும் என்றும் அவரை பல திரைத்துறை பிரபலங்களும் தொடர்ந்து பாராட்டி வருவதாகவும் சூர்யா கூறியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க 'ஜந்தர் மந்தர்' சுற்றுலாத் தலத்திற்குச் சென்ற அமெரிக்க உள்ளடக்க உருவாக்குநர் ஒருவருக்கு,…
தானே நகரின் மக்கள் நடமாட்டம் மிகுந்த தலாவ்பாலி பகுதியில், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறப்படும்…
குருகிராமில் 25 வயது இளைஞர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு, உயிருக்குப் போராடும் நிலையில் அவரது வீட்டு வாசலிலேயே வீசப்பட்ட சம்பவம்…
அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள புரூக்ளின் பகுதியில் நிகழ்ந்த கோர விபத்து ஒன்றில், பழமையான மூன்று மாடிக் கட்டிடம் இடிந்து தரைமட்டமானதில்…
சோஹ்ரத்கர் நகரின் 11-வது வார்டுக்கு உட்பட்ட ரகுநாத்நகர் பகுதியில், காஜல் என்ற பெண்ணும் அவரது 18 மாத மகன் டைகரும்…
செயற்கை நுண்ணறிவு சிப் தயாரிப்பில் முன்னணியில் உள்ள என்விடியா நிறுவனத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக வழிநடத்தி உச்சத்திற்குக் கொண்டு சென்ற…