தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமாவில் டாப் இசை அமைப்பாளராக வளம் வருபவர் அனிருத். நடிகர் தனுஷ் நடித்த 3 திரைப்படத்தின் அறிமுகமான அனிருத் முதல் படத்திலேயே உலக அளவில் பிரபலமானார். அனிருத் இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் ஒரு சிறந்த பாடகராகவும் தமிழ் சினிமாவில் வலம் வருகின்றார்.

அவர் இசையமைக்கும் பாடல்கள் மட்டுமல்லாமல் மற்ற இசையமைப்பாளர்கள் இசையிலும் அனிருத் பல பாடல்களை பாடி இருக்கிறார். அவர் பாடிய அனைத்து பாடல்களுமே ஹிட் கொடுத்துள்ளன. இறுதியாக இவர் ஜெயிலர், லியோ போன்ற சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்துள்ளார். இதைத்தொடர்ந்து தற்பொழுது இந்தியன் 2 திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். அதோடு மட்டுமில்லாமல் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்கவும் கமிட்டாகியுள்ளார்.

இந்த நிலையில் இசையமைப்பாளர் அனிருத் வீட்டில் ஆயுத பூஜைக்காக கொழு வைத்து பூஜை செய்து தரிசனம் செய்தனர்.இதற்காக திரையுலகை சார்ந்த முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் அஜித் வீட்டிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட ஷாலினி, தனது மகள் மற்றும் மகனுடன் பூஜையில் கலந்து கொண்டுள்ளார். தற்பொழுது இதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்…

