தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழ் பெற்ற நடிகராக இருந்தவர் அஜித்குமார். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாமல் தனது உழைப்பு மற்றும் விடாமுயற்சியினால் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கிறார். ஆரம்பத்தில் கார் ரேசிங்கில் ஆர்வம் கொண்டு அதில் கலந்து கொண்டு வந்திருந்தார் அஜித்குமார். 18 வயதில் இருந்தே கார் ரேசிங் செய்து வந்தார் அஜித் குமார்.

கார் ரேசிங் செய்து கொண்டிருக்கும்போதே அவ்வப்போது அஜித்குமார் மாடல்லிங்கும் செய்து வந்தார். அதன் மூலம் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 1990களில் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான அஜித்குமார் வாலி, காதல் மன்னன், பூவெல்லாம் உன் வாசம் போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். 2000 காலகட்டத்திற்கு பிறகு ரெட், பில்லா, மங்காத்தா, விசுவாசம் போன்ற பல கமர்சியல் வெற்றி திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார் அஜித் குமார்.
தற்போது அஜித்குமார் விடாமுயற்சி மற்றும் GoodBadUgly ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். இந்த இரண்டு திரைப்படங்களும் ரிலீசுக்கு வர காத்திருக்கிறது. ஏற்கனவே விடாமுயற்சி பொங்கலுக்கு ரிலீசாகும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அந்த தேதி தள்ளிப் போய் இருக்கிறது. ஏற்கனவே அஜித்குமார் இந்த இரண்டு படங்களை முடித்துவிட்டு துபாயில் நடக்கும் கார் ரேஸிங்கில் கலந்து கொள்வார் என்று அறிவிப்புகள் வெளிவந்தது.
அதன்படி அஜித்குமார் கடந்த டிசம்பர் 31ம் தேதிக்கு முன்பாகவே இந்த இரண்டு படங்களுக்கான பணிகளை முடித்துவிட்டு துபாய் சென்று விட்டார். கார் ரேசிங் பயிற்சி எடுத்துக் கொண்டார். இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் பயிற்சி எடுக்கும் போது அவர் கார் விபத்துக்குள்ளான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் நேற்று அஜித்குமார் தனது உடல் நலன் கருதி கார் ரேசிங்கில் ஓட்டுவதில் இருந்து விலகுகிறார் என்று அறிவிப்பு வெளியானது. ரசிகர்கள் இதனால் சற்று சோகம் அடைந்து இருந்தனர். தற்போது துபாய் 24H கார் ரேசிங்கில் 991 கேட்டகிரியில் அஜித்குமாரின் அணி மூன்றாம் இடத்தை பிடித்திருக்கிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து இருக்கின்றனர். போட்டியில் ஜெயித்ததும் அஜித்குமார் இந்திய தேசியக் கொடியை கையில் தாங்கி அசைத்துக் கொண்டே தனது மகிழ்ச்சியை உற்சாகத்துடன் வெளிப்படுத்தினார். பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். இந்தியாவிற்கே பெருமை சேர்த்துவிட்டார் அஜித்குமார் என்றும் வாழ்த்தி பேசி வருகின்றனர்.
View this post on Instagram
