ஐய்யய்யோ… விஜய் முதல் அமைச்சர்கள் வரை… கிழி கிழியென கிழித்த அஜிதா… சட்டசபை ரீல்ஸ்களை உடைத்து… தவெக-வை டோட்டல் டேமேஜ் செய்த பரபரப்பு சம்பவம்…!

By Swetha on புரட்டாதி 12, 2026

Spread the love

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய் தெரிவித்த கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. ஸ்டாலின் அனுபவித்த மிசா சிறைவாசம் தொடர்பாக விஜய் எழுப்பிய விமர்சனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் கடும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய தவெக முன்னாள் நிர்வாகியும், தற்போதைய திமுக நிர்வாகியுமான அஜிதா, 1976 அவசரநிலைக் காலத்தில் மிசா சட்டத்தின் கீழ் ஸ்டாலின் கைது செய்யப்பட்டு, 10க்கு 10 அறையில் அடைக்கப்பட்டு கொடுமையான சித்திரவதைகளைச் சந்தித்தார் என்பதைச் சுட்டிக்காட்டி விஜய்யின் விமர்சனத்துக்குக் கடுமையான பதிலை அளித்தார்.

சிறைவாசமும் போராட்ட வாழ்க்கையும் என்னவென்றே தெரியாதவர்கள் திமுகவையும் அதன் தலைவரையும் கொச்சைப்படுத்துவதாக அஜிதா தனது உரையில் குற்றம்சாட்டினார். கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தபோது தவெக தலைவரும் அமைச்சர்களும் எங்கே போனார்கள் என்று கேள்வி எழுப்பிய அவர், மக்கள் பாதிப்பில் இருந்தபோது தொடர்புகொள்ள முடியாதவாறு போன்களை ‘ஸ்விட்ச் ஆப்’ செய்துவிட்டு ஓடி ஒளிந்ததாக விமர்சித்தார். மேலும் பட்டினப்பாக்கத்தில் 1,200 கோடி ரூபாயில் தலைமைச் செயலகம் கட்டுவதைக் குறிப்பிட்டு, விஜய் அரசு விவசாயிகளுக்கோ, மீனவர்களுக்கோ அல்லது சாமானிய மக்களுக்கோ நண்பனாகச் செயல்படவில்லை என்றும், நாட்டின் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டது என்றும் சாடினார்.

   

சட்டமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் எந்தவிதப் புரிதலும் இன்றி வெறும் ‘ரீல்ஸ்’ மட்டுமே போட்டுக்கொண்டும், காகிதத்தில் ‘டேக் ஆக்சன்’ என்று எழுதுவதோடு கடமை முடிந்ததாகக் கருதியும் செயல்படுவதாக அவர் எள்ளல் செய்தார். எத்தனை நடிகர்களோ அல்லது புதிய தலைவர்களோ அரசியலுக்கு வந்தாலும், தடா, மிசா போன்ற கொடூர சட்டங்களை எதிர்கொண்டு வளர்ந்த திமுகவையும் அதன் தலைமையையும் ஏதும் செய்ய முடியாது என்று உறுதியாகக் கூறினார். அத்துடன் இலவச மின்சாரம் மற்றும் தொழிற்புரட்சியை உருவாக்கிய கலைஞர் வழியில் திமுக மட்டுமே என்றும் மக்களுக்காகக் குரல் கொடுக்கும் இயக்கமாக நிற்கும் என்று கூறித் தனது உரையை நிறைவு செய்தார்.