செம டுவிஸ்ட்..! சாவிலிருந்து மீண்டு வந்த அஜிதா..! “2026-ல் தளபதியை அரியணையில் ஏற்றுவேன்” அதிரடி எக்ஸ் பதிவால் அதிர்ச்சியில் தமிழக அரசியல்…!!

By Soundarya on மார்கழி 30, 2025

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் பெண் நிர்வாகி அஜிதா, தற்கொலை முயற்சியில் இருந்து மீண்டு உடல்நலம் தேறிய நிலையில், மீண்டும் கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளார். கடந்த டிசம்பர் 25-ம் தேதி ஏற்பட்ட மனவேதனை காரணமாகத் தற்கொலைக்கு முயன்ற அவர், மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து தற்போது வீடு திரும்பியுள்ளார்.

தற்போது தான் நலமுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ள அஜிதா, தனது எக்ஸ்  தளப் பதிவில், 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி இன்னும் கூடுதல் வேகத்துடன் களப்பணியாற்றப் போவதாகக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, வரும் 2026-ஆம் ஆண்டில் “தளபதியாரை” தமிழக முதல்வராக அரியணையில் அமர்த்த பலமடங்கு உத்வேகத்துடன் உழைக்க உறுதி பூண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.