நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் விடாமுயற்சி திரைப்படம் பிரபல ஆங்கில படத்தின் ரீமேக் என்று கூறப்பட்டு வரும் நிலையில் இதற்காகவா இத்தனை இலட்சம் செலவு செய்தீர்கள் என்று சினிமா பிரபலங்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் துணிவு. இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் கமிட்டான படம் தான் விடாமுயற்சி. இது திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகின்றார். மேலும் இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகின்றது.

லைக்கா நிறுவனம் தற்போது நிதி நெருக்கடியில் சிக்கி இருக்கும் காரணத்தால் இந்த திரைப்படத்தை கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக ஜவ்வு போல் இழுத்துக் கொண்டே வருகிறார்கள். இன்று தான் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக வீடியோ வெளியிட்டு ரசிகர்களை நிம்மதி அடைய வைத்திருக்கிறார்கள். மேலும் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி எப்போது என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
அஜித் நடிக்கும் இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருக்கின்றார். மேலும் ஆரவ் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் இயக்குவதற்கு தாமதமானதால் ஆதி ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் கமிட்டாகி நடித்து வருகின்றார் அஜித்.
இப்படி இருக்க இந்த திரைப்படம் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கில படமான பிரேக் டவுன் என்ற படத்தின் தழுவல் என கூறப்படுகின்றது. திரில்லர் முறையில் எடுக்கப்பட்ட இப்படத்தை தழுவி தான் விடாமுயற்சி படம் எடுக்கப்பட்டு வருவதாகவும் ஒரு நாளில் நடக்கக்கூடிய கதை என்றும் கூறப்படுகின்றது. ஹீரோ தன் மனைவியுடன் நீண்ட தூரம் காரில் பயணித்துக் கொண்டிருந்த நிலையில் கார் பழுதாகி விடுகின்றது.

அந்த சமயம் பார்த்து அவரது மனைவி மாயமாகி விடுகின்றார். அதன் பிறகு ஹீரோ அவரை கண்டுபிடிப்பது தான் கதை. இந்த படத்தின் உரிமையை வாங்கிவிட்டு தான் விடாமுயற்சி திரைப்படத்தை எடுத்ததாக தற்போது தகவல் வெளியாகியிருக்கின்றது. மேலும் இந்த திரைப்படத்தை இயக்குவதற்கு ஒரு நாளைக்கு 40 லட்சம் வரை செலவு செய்ய வேண்டிய அவசியம் என்ன இருக்கின்றது, இதனை நம்ம ஊர்களில் வைத்து எடுத்து முடித்து இருக்கலாமே என்று சினிமா விமர்சனங்கள் பலரும் கூறி வருகிறார்கள்.
