Categories: சினிமா

ஷாலினியை நான் முதல் முதலில் பார்த்த தருணம்… பல வருடங்களுக்குப் பிறகு காதல் பொங்க பகிர்ந்த அஜித்!

Spread the love

தமிழ் சினிமாவில் இன்றுள்ள வசூல் மன்னன்களில் முன்னணியில் இருப்பவர் நடிகர் அஜித். அமராவதியில் ஆரம்பித்த அவரின் திரைப் பயணம் இன்று விடாமுயற்சியில் உச்சத்தைத் தொட்டுள்ளது. முதலில் காதல் படங்களில் சாக்லேட் பாயாக வலம் வந்த அஜித் தீனா உள்ளிட்ட படங்களுக்கு பிறகு ஆக்ஷன் ரூட்டுக்கு மாறினார்.

90 களில் சாக்லேட் பாயாக வலம் வந்த அஜித் பல காதல் படங்களில் நடித்து பெண்களின் ஆசைநாயகனாக இருந்தார். இடையில் அவர் சில் காதல் கிசுகிசுக்களிலும் சிக்கினார். தன்னோடு இணைந்து நடித்த நடிகை ஹீராவை அவர் காதலித்ததாக அப்போது தகவல்கள் வெளியாகின. இருவரும் ஒன்றாக பல இடங்களுக்கு சேர்ந்து சுத்துவதாகவும் கிசுகிசுக்கள் அப்போது பரவின. இதை இருவருமே மறுக்கவில்லை.

ajith and shalini childhood photos

ஆனால் ஒரு கட்டத்தில் அவர்களின் காதல் பிரிந்தது. இதனால் சில ஆண்டுகள் அஜித் சினிமாவில் சரிவர கவனம் செலுத்தாமல் இருந்தார். அப்போது அமர்க்களம் நடித்த போது ஷாலினி மீது அஜித் காதல் வசப்பட்டு அவரிடம் ப்ரபோஸ் செய்தார். ஷாலினியும் அவர் குடும்பமும் சம்மதித்த பிறகு இருவரும் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு அனோஸ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் இருக்கிறார்.

இந்நிலையில் 2008 ஆம் ஆண்டு அளித்த ஒரு நேர்காணலில் அஜித், தான் முதல் முதலாக ஷாலினியை சந்தித்த தருணத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் “நான் என் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தேன். அப்போது நான் நிறைய திருட்டு தம் அடிப்பேன், பால்கனியில் நின்று தம் அடிக்கும்போது வெளியே ஏதோ ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. நான் அதைப் பற்றி விசாரித்த போது ‘சங்கர் கணேஷ்’ படத்தின் ஷூட்டிங் நடக்கிறது என்றும் அதில் பேபி ஷாலினி நடித்துக் கொண்டிருக்கிறார் என்றும் சொன்னார்கள்.

ajith and shalini

அதுதான் நான் அவரை முதலில் பார்த்தது. அப்போது நான் அவர்தான் எதிர்காலத்தில் என் மனைவியாக வருவார் என்றெல்லாம் நினைத்துக் கூட பார்க்கவில்லை. அதன் பின்னர் அவரை அமர்க்களம் படத்தின் ஷூட்டிங்கில்தான் முதல் முதலாகப் பார்த்தேன். பார்த்தவுடன் அவர் மேல் எனக்குக் காதல் வந்துவிட்டது என நினைக்கிறேன். திருமணத்துக்காக அவரிடம் கேட்டு கொஞ்ச நாள் பொறுத்திருந்துதான் அவர் சம்மதம் சொன்னார்.” எனப் பேசியுள்ளார்.

vinoth

Recent Posts

“உங்க அப்பா அங்கேயே சுத்திட்டு இருக்காரு!”… இறந்த தந்தையின் ஆவியை ‘பார்சல்’ செய்ய வந்த குடும்பம்…கோட்டா மருத்துவமனையில் நடந்த அதிர வைக்கும் தாந்திரீக சடங்கு…!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…

9 மணத்தியாலங்கள் ago

“மனுஷன் பேசுறது நாய்க்கே புரியுதா?”… நாயுடன் அமர்ந்து ராஜு குமார் செய்த அலப்பறை… வயிறு குலுங்கச் சிரிக்கும் நெட்டிசன்கள்… வைரல் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…

10 மணத்தியாலங்கள் ago

“ஒரே ஒரு சின்ன தவறு.. அழகான புன்னகைக்கு ஆசைப்பட்டுமொத்த பற்களும் அவுட்!… துருக்கி பல் மருத்துவர் செய்த விபரீத… ஜாக்கியின் கண்ணீர் கதை”…!!!

அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…

10 மணத்தியாலங்கள் ago

“அந்த 500 ரூபாய்க்கு பதில் லட்சங்களில் உதவி!”… அழுதுகொண்டிருந்த மூதாட்டியின் கண்ணீரை துடைத்த சமூக வலைத்தளம்… நெஞ்சை நனைக்கும் வைரல் சம்பவம்…!!!

சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…

11 மணத்தியாலங்கள் ago

“காசு கொடுத்தாத்தான் 4 பேர் வரணும்!”… ராபிடோ ஓட்டுநரின் அடாவடி செயலால் நடுத்தெருவில் நின்ற குடும்பம்… மும்பையில் நடந்த பகீர் சம்பவம்… வைரல் வீடியோ…!!!

மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…

11 மணத்தியாலங்கள் ago

“எங்களுக்கும் இப்படி ஒரு சார் கிடைச்சிருக்கலாம்!”… மாணவர்களுடன் சேர்ந்து பாடி அசத்திய கிதார் ஆசிரியர்… நெட்டிசன்களின் மனதை நெகிழ வைத்த ஆசிரியர்…. இணையத்தை நனைக்கும் வைரல் வீடியோ…!!!

இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…

11 மணத்தியாலங்கள் ago