Categories: சினிமா

ராஜாஜி அந்த படத்த பாத்துட்டாரா… அப்ப அதில் என்னமோ இருக்கணும்… மார்க்கெட்டிங்கில் மாஸ் காட்டிய வாசன்- பேய் ஓட்டம் ஓடிய ஔவையார்!

Spread the love

தமிழ் சினிமாவை இந்திய அளவில் கொண்டு சென்றதில் மறைந்த ஜெமினி ஸ்டுடியோ அதிபர் வாசனுக்கு பெரும் பங்குண்டு. அவர் எடுத்த ஔவையார், சந்திரலேகா உள்ளிட்ட படங்கள் பிரம்மாண்டத்தால் ரசிகர்களை வாய்பிளக்க வைத்தன. அதிலும் சந்திரலேகா என்ற திரைப்படம் தமிழ்நாடு மட்டுமில்லாமல் இந்திய அளவில் பெற்ற வெற்றியை நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாது.

1940 ஆம் ஆண்டே திட்டமிடப்பட்டு, 3 ஆண்டுகள் முன் தயாரிப்புப் பணிகள் நடத்தி 1943 ஆம் ஆண்டு வாக்கில் தொடங்கப்பட்ட சந்திரலேகா திரைப்படம் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் உருவாக்கத்தில் இருந்தது. சுதந்திரம் கிடைத்த பின்னர் படம் 1948ம் ஆண்டு வெளி வந்தது.  முதலில் இந்த படத்தை இயக்குனர் வேறொரு இயக்குனரை ஒப்பந்தம் செய்தார் வாசன். ஆனால் அவர் எடுத்த படம் தனக்கு பிடிக்காததால் தானே இயக்க முடிவு செய்தார்.

எஸ் எஸ் வாசன்

அதே போல அவர் தயாரிப்பில் உருவான ஔவையார் திரைப்படம் 6 ஆண்டுகள் உருவாக்கத்தில் இருந்தது. பல முறை எடுக்கப்பட்டு இருந்த 6 மணிநேரத்துக்கும் மேற்பட்ட காட்சிகளை சுருக்கி படமாக எடுத்து 1953 ஆம் ஆண்டு ரிலீஸ் செய்தார். அதற்கு சில மாதங்களுக்கு முன்னர்தான் பராசக்தி திரைப்படம் வெளியாகி பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. அதனால் இனிமேல் புராண படங்கள் எல்லாம் ஓடாது என ஒரு பேச்சு எழுந்தது.

அதனால் அந்த படத்தை எப்படியாவது மக்களிடம் கொண்டு செல்லவேண்டும் என அப்போதைய முதல்வர் ராஜாஜியைப் பார்க்க வைத்துள்ளார். ராஜாஜிக்கு சினிமா என்றாலே பிடிக்காது. ஆனாலும் அந்த படத்தை வந்து பார்த்துள்ளார். ராஜாஜி படம் பார்த்ததை செய்தியாக்கி விளம்பரம் கொடுத்துள்ளனர். ராஜாஜி அவ்வையார் படத்தைப் பார்த்துள்ளார் என்பதே ஒரு பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அதனால் படம் வெளியானதும் பெரியளவில் ரசிகர்கள் தியேட்டர்களுக்கு அலைமோதியுள்ளனர். படம் தொடர்ந்து சிறப்பாக ஓட, இரண்டாவது முறை தானே டிக்கெட் எடுத்துக் கொண்டு போய் மீண்டும் ஒரு முறை படம் பார்த்துள்ளார்.

ராஜாஜி இரண்டாவது முறை ஒரு படம் பார்க்கிறாரா என்று படம் தியேட்டரில் இருந்து தூக்கப் போகும் நிலையில் மீண்டும் மக்கள் கூட்டம் படையெடுக்க ஆரம்பித்துள்ளது. இப்படி பெருவெற்றி பெற்றுள்ளது அவ்வையார் திரைப்படம். ஆனால் கதை இதோடு முடியவில்லை. ராஜாஜி இறந்த போது அவரின் நாட்குறிப்புகளைப் பார்க்கும் போது இந்த படத்தை பற்றி எழுதி வைத்திருந்தது என்ன தெரியுமா?

அது இதுதான்”இந்த படத்தில் அப்படி என்ன இ

அவ்வையார் படத்தில் கே பி சுந்தராம்பாள்.

ருக்கிறது என்று மக்கள் விழுந்தடித்து இப்படி பறக்க பறக்க இந்த படத்தைப் பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை” என்றுதான் எழுதி வைத்திருந்தாராம்.

 

vinoth

Recent Posts

“உங்க அப்பா அங்கேயே சுத்திட்டு இருக்காரு!”… இறந்த தந்தையின் ஆவியை ‘பார்சல்’ செய்ய வந்த குடும்பம்…கோட்டா மருத்துவமனையில் நடந்த அதிர வைக்கும் தாந்திரீக சடங்கு…!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…

8 மணத்தியாலங்கள் ago

“மனுஷன் பேசுறது நாய்க்கே புரியுதா?”… நாயுடன் அமர்ந்து ராஜு குமார் செய்த அலப்பறை… வயிறு குலுங்கச் சிரிக்கும் நெட்டிசன்கள்… வைரல் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…

9 மணத்தியாலங்கள் ago

“ஒரே ஒரு சின்ன தவறு.. அழகான புன்னகைக்கு ஆசைப்பட்டுமொத்த பற்களும் அவுட்!… துருக்கி பல் மருத்துவர் செய்த விபரீத… ஜாக்கியின் கண்ணீர் கதை”…!!!

அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…

9 மணத்தியாலங்கள் ago

“அந்த 500 ரூபாய்க்கு பதில் லட்சங்களில் உதவி!”… அழுதுகொண்டிருந்த மூதாட்டியின் கண்ணீரை துடைத்த சமூக வலைத்தளம்… நெஞ்சை நனைக்கும் வைரல் சம்பவம்…!!!

சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…

10 மணத்தியாலங்கள் ago

“காசு கொடுத்தாத்தான் 4 பேர் வரணும்!”… ராபிடோ ஓட்டுநரின் அடாவடி செயலால் நடுத்தெருவில் நின்ற குடும்பம்… மும்பையில் நடந்த பகீர் சம்பவம்… வைரல் வீடியோ…!!!

மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…

10 மணத்தியாலங்கள் ago

“எங்களுக்கும் இப்படி ஒரு சார் கிடைச்சிருக்கலாம்!”… மாணவர்களுடன் சேர்ந்து பாடி அசத்திய கிதார் ஆசிரியர்… நெட்டிசன்களின் மனதை நெகிழ வைத்த ஆசிரியர்…. இணையத்தை நனைக்கும் வைரல் வீடியோ…!!!

இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…

10 மணத்தியாலங்கள் ago