24-வது திருமண நாளை பிரபல ஹோட்டலில் கொண்டாடிய அஜித்-ஷாலினி தம்பதி… வைரலாகும் வீடியோ…

By Begam on ஏப்ரல் 24, 2024

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த ‘துணிவு’ திரைப்படம் ஆக்சன் திரில்லர் திரைப்படமாக அமைந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து தற்பொழுது இவர் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

   

இத்திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. நடிகர் அஜித் நடிகை ஷாலினியை  2000ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்பொழுது ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை ஷாலினி . திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதில்லை.

   

 

தற்பொழுது இரண்டு பிள்ளைகளுடன், தனது குடும்பத்தை மட்டும் கவனித்துக் கொண்டு வருகிறார். திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வரும் நடிகர் அஜித் அவ்வப்பொழுது பைக் ரைடும் சென்று வருகிறார். நடிகர் அஜித் ‘ஏகே மோட்டோ ரைட்’ என்ற நிறுவனம் ஒன்றையும் தொடங்கியுள்ளார். நடிகர் அஜித்துக்கு பைக் ரேட் செல்வது மிகவும் பிடிக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒரு விஷயமே .

#image_title

இந்நிலையில் நடிகர் அஜித் சினிமாவில் எவ்வளவு பிசியாக இருந்தாலும், தனது குடும்பத்திற்காக எப்பொழுதும் நேரம் செலவிடக் கூடியவர். இன்றுடன்  நடிகர் அஜித் மற்றும் ஷாலினி இருவரும் திருமணம் செய்து கொண்டு 24 வருடங்களை ஒன்றாக கடந்துள்ளனர். இவர்கள் தங்களது 24 வது திருமண நாளை சென்னையில் உள்ள Leela Palace ல் கொண்டாடிய வீடியோ தற்பொழுது இணையத்தில் வெளியாகி உள்ளது. இதனை பார்த்த ரசிகர்களும் இந்த ஜோடிக்கு தங்களது   திருமண நாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…