தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் மகிழ் திருமேனி இயக்கி வரும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபகாலமாகவே அஜித் தொடர்ந்து ஒரே இயக்குனர்களின் படங்களில் நடித்து வந்தார். அதாவது சிறுத்தை சிவா உடன் தொடர்ந்து மூன்று படங்கள், அதை தொடர்ந்து ஹெச் வினோத்துடன் மூன்று படங்கள் என்று ஒரே டெம்ப்ளேட்டில் இருந்து வந்தார்.

ஆனால் தற்போது அந்த வளையத்தில் இருந்து வெளியில் வந்து தற்போது புதிய இயக்குனர் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் விஷால் மற்றும் எஸ்.ஜே சூர்யா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மார்க் ஆண்டனி. இந்த திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார்.

இந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் வெற்றியை கொடுத்தது. இந்த திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் கூட அஜித்தை புகழ்ந்து பேசி இருப்பார். இதைத்தொடர்ந்து தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கின்றது. இந்த திரைப்படத்தை விடுதலை படத்தை தயாரித்த தயாரிப்பாளர் தான் தயாரிக்க இருக்கிறாராம்.

ஏற்கனவே அஜித்தை தன் குருவாக, அண்ணனாக பார்க்கும் ஆதிக் ரவிச்சந்திரன், மார்க் ஆண்டனி திரைப்படத்தில் கூட அஜித்துக்கு நன்றி தெரிவித்து டைட்டில் கார்டு போட்டிருந்தார். விஜய்க்கு எப்படி லோகேஷ் கனகராஜ், அதேபோல் அஜித்துக்கும் ஆதிக் ரவிச்சந்திரன் ஒரு தரமான திரைப்படத்தை கொடுப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்து வருகிறார்கள். இது தகவல் அஜித் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
