CINEMA
சித்தார்த் ஒரு சுயநலவாதி…! கர்நாடகாவுக்கு கரண்ட் தராதீங்க…! காவேரி விவகாரம் எரியுற தீயில் எண்ணெய் ஊற்றும் நடிகை கஸ்தூரி(வீடியோ)…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை கஸ்தூரி. இவர் ஆத்தா உன் கோயிலிலே, சின்னவர், புதிய முகம், அமைதிப்படை, ஆகாயப் பூக்கள், கோலங்கள், இந்தியன், சுயம்வரம், தோஸ்த், வடகறி கடைசியாக தமிழரசன் என்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். திரைப்பட நடிகையாக மட்டுமல்லாமல் இணைய பக்கங்களிலும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை கஸ்தூரி. அவ்வப்போது சினிமா அரசியல் பொது நலம் சார்ந்த பிரச்சினைகளில் தன்னுடைய கருத்தை வெளிப்படையாக கூறி வருகிறார்.
இதனால் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார் நடிகை கஸ்தூரி. இந்நிலையில் இன்று கும்பகோணம் பகுதிகளிலுள்ள கோயில்களுக்கு தரிசனம் மேற்கொள்ள வந்த அவர் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில் ‘காவிரி நீர் கொடுக்காத கர்நாடகா மாநிலத்துக்கு வழங்கி வரும் மின்சாரம், வணிகத்துக்காக அனுப்படும் உணவுப் பொருட்களை நிறுத்த வேண்டும்” என்று நடிகை கஸ்தூரி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பேசிய அவர் ‘ சித்தார்த் ஒரு சுயநலவாதி. கன்னடக்காரனுக்கு பயந்து ஓடிவிட்டார்என்றும், அவர் திமுக – காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்தான். ஆனால், அவர் அவமானப்படுத்தப்பட்டபோது, அந்தக் கட்சியினர் கைவிட்டு விட்டனர். அவர் தமிழகத்துக்காகவும், காவிரிக்காகவும் குரல் கொடுத்திருந்தால், அவரது படத்தை இங்குள்ளவர்கள் பார்வையிட்டு அவரை கொண்டாடியிருப்பார்கள். தற்போது திரைத் துறையில் மத, சாதிய ரீதியாக பிளவுகள் ஏற்பட்டு வருகிறது. லியோ படத்தில் நடிகர் விஜய் பேசியுள்ள வசனத்தை அவர் பேசியிருக்க கூடாது.
இன்று நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தை கர்நாடகா மாநில எல்லையில் நடத்தி, அவர்களுக்கு வழங்கப்படும் மின்சாரம், அனுப்பப்படும் உணவுப் பொருட்களை மற்றும் இரு மாநிலங்களுக்கு இடையே உள்ள வணிக செயல்பாடுகளை நிறுத்த வேண்டும்” என்று நடிகை கஸ்தூரி காவேரி விவகாரம் குறித்து கூறி எறியும் தீயில் எண்ணெய் ஊற்றியுள்ளார். இதோ அந்த வீடியோ…