இந்த நாளை பார்க்க என் அப்பா இருந்திருக்கலாம்… பத்ம பூஷன் விருது வாங்கிய நடிகர் அஜித்குமார் உருக்கம்..!

By Soundarya on தை 26, 2025

Spread the love

நடிகர் அஜித்குமாருக்கு இந்திய அரசு பத்மபூஷன் விருது அறிவித்துள்ளது, இதனை ரசிகர்கள் ஒரு பக்கம் கொண்டாடி வருகிறார்கள். மறுபக்கம் அஜித் ஒரு அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில்,” குடியரசு தலைவர் அவர்கள் அறிவித்த மதிப்புமிக்க பத்ம பூஷன் விருதை பெறுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மதிப்பு மிக்க கௌரவத்திற்காக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மாண்புமிகு பிரதமர் மோடி ஆகியோருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தாழ்மையோடு தெரிவித்துக் கொள்கிறேன். நம்முடைய தேசத்திற்கு என்னுடைய பங்களிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளதை நான் பாக்கியமாக கருதுகிறேன். இந்த அங்கீகாரம் தனிப்பட்ட முறையில் எனக்கானது மட்டும் கிடையாது.

   

இதனை சாத்தியப்படுத்திய பலருடைய உழைப்பும் இதில் அடங்கும். என்னுடைய மதிப்பிற்குரிய திரைத்துறையின,ர் திரைத்துறை முன்னோடிகள், நண்பர்கள் உட்பட அனைவருக்கும் என்னுடைய நன்றி. எங்களுடைய உத்வேகம், ஒத்துழைப்பு, ஆதரவு ஆகியவை என்னுடைய பயணத்தில் உறுதுணையாக இருந்ததோடு எனக்கு விருப்பமாக இருந்த மற்ற விஷயங்களிலும் கவனம் செலுத்த உதவியது. என்னுடைய மோட்டார் ரேஸிங் நண்பர்கள், ஸ்போர்ட்ஸ் பிஸ்டல், ரைஃபிள் ஷூட்டிங் நண்பர்களுக்கும் நன்றி. மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் (MMSC), இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் (FMSCI), தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT), இந்திய தேசிய ரைஃபிள் சங்கம் மற்றும் சென்னை ரைஃபிள் கிளப்   உட்பட அனைவருக்கும் நன்றி. என்னுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் அளவற்ற அன்பும் ஆதரவும் தான் என்னுடைய பக்கபலம். அதற்கும் நன்றி.

   

 

இந்த நாளை பார்ப்பதற்கு என்னுடைய மறைந்த தந்தை இப்போது என்னோடு இருந்திருக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். ஆனாலும் நான் செய்யும் எல்லாவற்றிலும் அவருடைய வழிகாட்டுதல்கள் இருக்கிறது என்பதில் அவர் பெருமை அடைவார்.என் அம்மாவின் நிபந்தனையற்ற அன்புக்கும், நான் என்னவாக மாற நினைத்தேனோ அதுவாக மாற உதவிய அவருடைய தியாகங்களுக்கும் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். கடந்த 25 வருடங்களில் என்னுடைய அனைத்து சந்தோஷங்களிலும், வெற்றிகளிலும் துணையாக இருந்த என்னுடைய மனைவியும் தோழியுமான ஷாலினி என்னுடைய பக்கபலம்.

என்னுடைய குழந்தைகள் என் பெருமை மற்றும் என் வாழ்க்கை சிறப்பாக செயல்படுவது மற்றும் சரியாக வாழ்வது எப்படி என்பதற்கு ஒரு முன்மாதிரியாக இருக்க என்னை ஊக்குவிக்கிறார்கள். என்னுடைய ரசிகர்கள், ஆதரவாளர்கள், நலம் விரும்பிகள் அனைவரும் என் மீது வைத்திருக்கும் அசைக்க முடியாத அன்பும் ஆதரவு மே என்னை அர்ப்பணிப்போடு இருக்க உந்துகிறது. இந்த விருது என்னுடையது போல உங்களுக்குமுடையது. இந்த கௌரவத்திற்கும், பயணத்திற்கும் ஒரு பகுதியாக இருப்பதற்கு அனைவருக்குமே நன்றி. என்னுடைய பயணத்தில் நான் உற்சாகமாக இருப்பதை போலவே உங்களுடைய அனைவருடைய பயணமும் உற்சாகமாகவும் வெற்றிகரமாகவும் அமைய வாழ்த்துக்கள்… நன்றியுடன் அஜித்குமார்” என்று பதிவிட்டுள்ளார்.