இரண்டாம் நாளே வசூலில் சரிவை சந்தித்த விடாமுயற்சி.. மொத்த கலெக்ஷனே இவ்வளவுதானா…?

By Nanthini on மாசி 8, 2025

Spread the love

நடிகர் அஜித்தின் 62 ஆவது திரைப்படம் தான் விடாமுயற்சி. மகிழ் திருமேனி இந்த திரைப்படத்தை இயக்கியுள்ள நிலையில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். வில்லனாக ஆரவ், ஆக்ஷன் கிங் அர்ஜுன், வில்லியாக ரெஜினா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளார்கள். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்தத் திரைப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக படத்தின் வேலைகள் நடைபெற்று வந்த நிலையில் படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் படம் ரிலீஸ் ஆவதில் பிரச்சனை ஏற்பட்டது.

அஜித்தின் 'விடாமுயற்சி' ரிலீஸ் LIVE: எகிறும் வீக்கெண்ட் டிக்கெட் புக்கிங்..  வசூல் வேட்டை உறுதி! | Vidaamuyarchi Movie Release Today LIVE News in Tamil,  Reviews, Story, Box ...

   

இதனால் படத்தின் ரிலீஸ் தேதி திடீரென மாற்றப்பட்டது. அதன் பிறகு பிப்ரவரி 6ம் தேதி விடாமுயற்சி திரைப்படம் ரிலீஸ் ஆகும் என கூறப்பட்ட நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரசிகர்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக நேற்று முன்தினம் விடாமுயற்சி திரைப்படம் வெளியானது.  ஏகப்பட்ட கட்டவுட்டுகள் வைக்கப்பட்டு பட்டாசுகள் வெடித்து ரசிகர்கள் பண்டிகையாக விடாமுயற்சி திரைப்படத்தை கொண்டாடினர். அஜர்பைஜானில் தனது காதல் மனைவியை கடத்திய கும்பலிடம் இருந்து அவரை ஹீரோ எப்படி காப்பாற்றுகிறார் என்ற கதைக்களத்தை கொண்ட விடாமுயற்சி திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இருந்து கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.

   

 

இப்படியான நிலையில் விடாமுயற்சி திரைப்படம் தமிழகத்தில் மட்டும் முதல் நாளில் 22 கோடியும் இந்தியாவில் மொத்தமாக 26 கோடியும் வசூல் செய்திருந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் நாள் முடிவில் விடாமுயற்சி திரைப்படம் தமிழ்நாட்டில் 8.4 கோடியும் இந்திய அளவில் 8.75 கோடியும் வசூல் செய்துள்ளது. இதனால் விடாமுயற்சி திரைப்படம் இரண்டு நாட்களில் மொத்தமாக 32.12 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது.