தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பல வெற்றி திரைப்படங்களை கொடுத்தவர்தான் அஜித். தனக்கென்று தனி ஒரு ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிய வைத்திருக்கும் அஜித் நடிப்பு மட்டுமல்லாமல் துப்பாக்கி சூடு, கார் மற்றும் பைக் ரேஸ் என பல போட்டிகளில் தன்னை நிரூபித்து வருகின்றார். துபாயில் நடந்த கார் ரேஸ் பந்தயத்திற்காக தனி அணியை உருவாக்கிய அஜித் அந்த போட்டியில் பங்கேற்ற இந்தியாவுக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்தார். இதனிடையே இந்த ஆண்டில் இவருடைய நடிப்பில் விடா முயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய திரைப்படங்கள் வெளியானது.
இந்த படத்திற்கு பிறகு அஜித்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகாமல் உள்ளது. சினிமாவை கடந்து விளையாட்டுப் போட்டிகளில் அசத்தி வரும் அஜித் சமீபத்தில் ஸ்பெயின் நாட்டில் நடந்த 24 மணி நேர கார் பந்தயத்தில் மூன்றாவது இடம் பிடித்த சாதித்தார். அடுத்த ஆண்டு அபுதாபியில் நடைபெறும் கார்பந்தயப் போட்டியில் அஜித் தன்னுடைய ரேசிங் அணியுடன் கலந்து கொள்ள உள்ளார். இதனிடையே தனது குடும்பத்தினருடன் பாலக்காட்டில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் அஜித் சமீபத்தில் தரிசனம் செய்திருந்தார். இந்நிலையில் அஜித் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
காலை நடைபெற்ற சுப்ரபாத பூஜையின் போது வரிசையில் என்று சாமி தரிசனம் செய்தார். அங்கு அஜித்தை கண்ட ரசிகர்கள் அனைவரும் ஆரவாரம் செய்தனர். அப்போது அஜித்குமார் மற்றவர்கள் யாரையும் போட்டோ எடுக்க அனுமதிக்காத நிலையில் அங்கிருந்த ஒரு ரசிகர் தன் கையில் இருந்த செல்போனை அஜித்திடம் காட்டியவாறு தனக்கு காது கேட்காது மற்றும் வாய் பேச முடியாது எனவும் செல்ஃபி எடுத்துக் கொள்ள விரும்புவதாகவும் கூறினார். உடனே அவருடைய செல்போனை வாங்கிய அஜித்து செல்பி எடுத்து அந்த ரசிகருக்கு கொடுத்தார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
காது கேக்காதுனு தெரிஞ்ச உடனே அவரே ஃபோன வாங்கி செல்ஃபி எடுத்தாரு பாருங்க ❤️❤️❤️#AjithKumar #AK64
— Madurai Online AFC (@AjithFCMadurai) October 28, 2025
