அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் குட் பேட் அக்லி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ரசிகர்கள் இப்படத்தின் மீது பெரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றன. படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். இந்தத் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் பத்தாம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது. இதனால் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளை படக்குழுவினர் தொடங்கிவிட்டனர்.

ஏற்கனவே படம் குறித்து ஜிவி பிரகாஷ் குமார் கூறுகையில், இப்படத்தில் அஜித் குமாருக்கு மாசான காட்சிகள் நிறைய உள்ளது, ஆதிக் ரவிச்சந்திரன் பேன் வாயாக இருந்து இந்த படத்தை எடுத்துள்ளார். அஜித்தை முதல் சாட்டில் இயக்கிவிட்டு ஆதிக் ரவிச்சந்திரன் கண்ணீர் சிந்தி அழுதுள்ளார் என ஜீவி பிரகாஷ் சமீபத்தில் கூறியிருந்தார். இது அஜித் ரசிகர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தியது. மேலும் இப்படத்திற்கு தன்னுடைய கெரியர் பெஸ்ட் இசையை கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். படம் குறித்து அதிகம் ஜிவி பிரகாஷ் ரசிகர்கள் மத்தியில் பல அப்டேட்டுகளை தொடர்ந்து கொடுத்து வருகின்றார்.

இறுதியாக கடந்த 2023 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் துணிவு திரைப்படம் வெளியான நிலையில் சுமார் இரண்டு வருட இடைவேளைக்கு பிறகு சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான விடாமுயற்சி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. அதனால் இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவிவரும் நிலையில் சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி இணையத்தை அதிர வைத்தது. டீசர் வெளியான சில நிமிடங்களிலேயே யூடியூபில் 25 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்தது. அதில் நடிகர் அஜித் மூன்று விதமான தோற்றங்களில் தோன்றி ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளார்.

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது முந்தைய படமான மார்க் ஆண்டனி திரைப்படத்தில் ரீமேக்ஸ் பாடலை பயன்படுத்தி வெற்றி கண்டார். பஞ்சு மிட்டாய் சேலை கட்டி பாடலை ரீமிக்ஸ் செய்து அதிரடி ஆக்சன் காட்சிகளுடன் இணைத்து ரசிகர்களுக்கு மாஸ் ட்ரீட் கொடுத்தார். அதன் பார்முலாவை தற்போது அஜித்தின் குட் பேட் அக்லி படத்திலும் அவர் கையாண்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இப்படத்திலும் ரீமிக்ஸ் பாடல் ஒன்று இடம்பெற உள்ளதாம். பிரபலமான பழைய பாடலான “தொட்டுத் தொட்டு பேசும் சுல்தானா”என்ற பாடலை இப்படத்திற்காக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் ரீமேக் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் அஜித் ரசிகர்களை மேலும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
