Categories: சினிமா

விஜயகாந்திற்கு இறுதி அஞ்சலி செலுத்த நேரில் வராத அஜித், சூர்யா, சிம்பு, தனுஷ்.. இது தான் காரணமா..?

Spread the love

தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்களில் ஒருவர் விஜயகாந்த். 45 ஆண்டுகளுக்கு மேலாக 180க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர். தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக இருந்தவர். தேமுதிக என்ற அரசியல் கட்சியை துவங்கி, தமிழக அரசியல் வரலாற்றில் பரபரப்பை ஏற்படுத்தியவர். 2011ம் ஆண்டில் திமுகவை விட அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று, தமிழக சட்டசபையில் ஜெயலலிதா ஆட்சியில், எதிர்கட்சி தலைவராக அமர்ந்தவர்.

உடல் ஆரோக்கியம் மட்டும் சரியாக இருந்திருந்தால், விஜயகாந்த் தமிழகத்தை முதலமைச்சராக ஆட்சி செய்திருப்பார் என்பதுதான் பலரது கருத்தாக இருந்தது. இந்நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர், நேற்று காலை உயிரிழந்தார். இன்று சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்ட அவரது உடல், மாலையில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. பல லட்சம் மக்கள் கண்ணீர் மல்க அவருடன் இறுதியாக விடை கொடுத்தனர். ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், குஷ்பு, சரத்குமார், பிரபு, விஜய், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட முன்னணி நடிகர், நடிகையர், அரசியல் பிரபலங்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

ஆனால் நடிகர்கள் அஜீத்குமார், தனுஷ், சூர்யா, கார்த்தி, சிலம்பரசன் ஆகியோர் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த நேரில் வரவில்லை. இதில் தனுஷ் இப்போது ஜெர்மனியில் இருப்பதால், அவரது அப்பா கஸ்தூரிராஜாவை அஞ்சலி செலுத்த அனுப்பி வைத்தார். அதேபோல் துபாயில் உள்ள சிலம்பரசனும் வரமுடியாத நிலையில், தனது தந்தை டி. ராஜேந்தரை அனுப்பி வைத்தார், சூர்யா பின்லாந்திலும், கார்த்தி ஆஸ்திரேலியாவிலும் உள்ள நிலையில், சூர்யா வீடியோ வெளியிட்டு வருத்தம் தெரிவித்திருந்தார்.

ஆனால் அஜித்குமார் துபாயில் இருக்கிறார், அவர் இதுபோன்ற துக்க நிகழ்வுகள், சினிமா கலை நிகழ்ச்சிகள், பிரமோ நிகழ்ச்சிகளில் பங்கேற்பது இல்லை என்ற கொள்கையில் இருக்கிறார். ஆனால் விஜயகாந்த் என்ற மூத்த நடிகரின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தா விட்டாலும், நான்குவரியில் ஒரு வருத்தம் தெரிவித்திருக்கலாம். இப்படி அவர் பண்பின்றி நடந்துக்கொண்டது, சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வருகிறது.

admin

Recent Posts

பதற வைக்கும் த.வெ.க-வின் பிளான்..! ‘சீட்’ கிடைக்காத சீனியர்களுக்கு சிவப்புக் கார்பெட்… தேர்தல் முடிவுக்குப் பின் மெகா ட்விஸ்ட்..!!

தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்…

1 minute ago

தமிழக வரலாற்றையே மாற்றப்போகும் 2026 தேர்தல்… ரிசல்ட் எப்படி இருந்தாலும் மிகப்பெரிய மாற்றம் வரப்போவது உறுதி… அதிர்ச்சி தரும் உண்மைகள்….!

இந்திய அரசியலின் திசையைத் தீர்மானிக்கப்போகும் ஒரு மகா யுத்தத்தின் தீர்ப்பு நாளாக இன்று மே 4, 2026 அமைந்துள்ளது. தமிழ்நாடு,…

5 minutes ago

பெரம்பூர் டூ திருச்சி…! விஜய்க்கு காத்திருக்கும் அக்னிப்பரீட்சை… டெபாசிட் வாங்கவே ‘இவ்வளவு’ ஓட்டு வேணுமா..?

தமிழக அரசியல் களத்தில் நடிகர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடுவது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.…

8 minutes ago

“மே 29 முதல் கேதுவின் ‘ராஜயோகம்’ ஆரம்பம்!…சொந்த நட்சத்திரத்திற்கு வரும் கேது…கோடீஸ்வரராகப் போகும் அந்த 4 ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா?”

வேத ஜோதிடத்தில் நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது எப்போதும் பின்னோக்கியே சஞ்சரிப்பவை. அந்த வகையில், வரும் மே 29-ஆம்…

9 minutes ago

“டேய் என்னடா பண்ணிவச்சிருக்கீங்க”… மாணவர்கள் விடுதியில் விசிறிக்கு இரும்பு கூண்டு…. காரணத்தை கேட்டா அதிர்ந்து போயிருவீங்க…!

இந்தியாவின் பயிற்சி மையங்களின் தலைநகராக அறியப்படும் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில், மாணவர் விடுதி ஒன்றின் வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில்…

10 minutes ago

திருமணமான 3 மாதத்தில் இப்படியா..? மாமனார் செய்த செயல்… விஷம் குடித்து கவலைக்கிடமான நிலையில் மருமகன்.. நடந்தது என்ன..??

பரேலியின் சுபாஷ் நகர் பகுதியில் உள்ள கார்கேனா கிராமத்தைச் சேர்ந்த 23 வயதான அஜய் என்பவருக்கும், ஷேகுபூர் பகுதியைச் சேர்ந்த…

14 minutes ago