நடிகர் அஜித்தின் நண்பரான தைசை துறைசாமியின் மகனான வெற்றி துரைசாமி அவர்கள் இமாச்சலப் பிரதேசத்தில் சுற்றுலா சென்ற போது கார் விபத்தில் சிக்கி இறந்தது விட்டார், கார் பாங்கி நல்லா அருகே சட்லஜ் ஆற்றில் கவிழ்ந்தது. கார் டிரைவர் தன்ஜினுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு கார் நிலை தடுமாறி ஆற்றில் கவிழ்ந்துள்ளது. இதில் கார் ஓட்டுநர் சம்பவத்தில் உயிரிழந்தார். மேலும், காரில் பயணம் செய்த வெற்றியின் நண்பர் கோபிநாத் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துமனையில்அனுமதிக்கப்பட்டார்.
வெற்றியின் உடல் பல நாட்களாக தேடியும் கிடைக்காததால், தனது மகன் வெற்றி துரைசாமியைக் கண்டுபிடிப்பவர்களுக்கு, ரூ.1 கோடி சன்மானம் வழங்கப்படும் என சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி அறிவித்து இருந்தார்.. துரைசாமியும் தனது மகனை கண்டுபிடிக்க உதவுமாறு உள்ளூர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையடுத்து, கடந்த 6ந் தேதி, சட்லஜ் நதியின் பாறை இடுக்குகளில் மூளையின் திசுக்கள் சில கண்டெடுக்கப்பட்டன. அது வெற்றி துரைசாமியுடையது தானா என்று தெரிந்து கொள்ள DNA பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த பரிசோதனை முடிவுகள் தெரிய 3 நாட்கள் ஆகும் என கூறப்பட்டது.
இதையடுத்து, அவரைப்போல மாதிரி உருவம் கொண்ட பொம்மையை ஆற்றில் விட்டு, நீர் தடத்தை கண்டுபிடிக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, வெற்றி துரைசாமியின் உடல் 9 நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பிறகு, சட்லஜ் நதியில் 6 கி.மீ தொலைவில் கிடைத்துள்ளது. பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் விமானம் மூலம், சென்னை நந்தனம் சிஐடி நகர் பகுதியில் உள்ள இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, இன்று மாலை 5 மணி அளவில் கண்ணம்மா பேட்டை மயானத்தில் தகனம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வெற்றி துரைசாமியின் நண்பரான அஜித் தனது மனைவி ஷாலினியுடன் சைதை துரைசாமியின் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறியுள்ளார். நண்பனை பறிகொடுத்த சோகத்துடன் இருக்கும் அஜித்திற்கு அவரது ரசிகர்கள் இணையத்தின் வாயிலாக ஆறுதல் கூறி வருகின்றனர். இன்னும் சற்று நேரத்தில் வெற்றி துரைசாமியின் உடல் விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட உள்ளது.
AK Paid His Last Respect To His Dear Friend, Vetri Duraisamy Sir.. #RIPVetriDuraisamy ????pic.twitter.com/QoUheAi8hF
— AJITHKUMAR FANS CLUB (@ThalaAjith_FC) February 13, 2024