என்னடா, ஏதோ ஆபரேஷன்-லாம் சொன்னிங்க.. பசங்க FOOTBALL விளையாட்றத பாத்துட்டு இருக்காரு.. அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ..

By Ranjith Kumar

Published on:

மகிழ் திருமேனி இயக்கத்தில் லைக்கா தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் படம் தான் விடாமுயற்சி. இப்படம் கடந்த ஒரு வருடமாக எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது படங்களில் சில பிரச்சினைகள் ஏற்பட்டு வந்து கொண்டிருந்த நிலையில், இந்த சமயத்தில் தான் லைக்கான நிறுவனத்தின் போதிய பணம் இல்லாததால் படப்பிடிப்பை சிறிது காலம் தள்ளி வைத்திருந்தார்கள்.

இதற்கிடையே அஜித் மீண்டும் உலக சுற்றுலா செல்லலாம் என்று துபாயில் உள்ள தன் பைக்கை தயார் செய்ய சொல்லி இருந்தார். அதற்கான வேலையை மிக விறுவிறுப்பாக நடத்தி வந்த நிலையில், திடீரென அஜித்தின் உடல்நிலை சரியில்லாமல் போக, சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அந்த சமயத்தில் பல வதந்திகள் பரவி வந்தன.

   

அஜித்திற்கு மூலையில் கட்டி இருப்பதாகவும், அது கடந்த சில மாதங்களாகவே அவருக்கு தொந்தரவாக இருந்து வந்து நிலையில் தற்போது கண்டறியப்பட்டு அதை அறுவை சிகிச்சையின் மூலம் நீக்கப்பட்டுள்ளது என்றும், இதற்காக சிறந்த மருத்துவர்கள் மதுரை மற்றும் கேரளாவில் இருந்து வரவழைக்கப்பட்டார்கள் என்று, பல வதந்திகள் பரவி வந்தன. ஆனால் இதை எல்லாம் பொய் என்று அஜித்தின் மேலாளர் சுரேஷ் தெரிவித்து இருந்தார். அஜித்திற்கு வெறும் காது ஓரம் நரம்பு பிரச்சனை மட்டும்தான் உள்ளது, வேறு எதுவும் இல்லை, அதுவும் தற்போது சிகிச்சை பெற்று அவர் நலமாக இருக்கிறார, என்று தெரிவித்திருந்தார்.

நேற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று முடித்து வீடு திரும்பிய அஜித், தன் மகன் பள்ளியில் Foodball விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்வதை, நேரில் பார்ப்பதற்காக அங்கு சென்றிருக்கிறார். அதை வீடியோ எடுத்து பலரும் இணையத்தில் பகிர்ந்து அஜித் உடல்நிலை சரியாகி அவர் come back கொடுத்து விட்டார் என்று தெரிவித்து வருகிறார்கள். தற்போது அந்த வீடியோ தான் இணையத்தில் மிக வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது. அஜித் ரசிகரும் ரசிகர்களும் இதை கண்டு மிகவும் சந்தோஷத்தில் ஆழ்ந்துள்ளார்கள்.

author avatar
Ranjith Kumar