தல அஜித்துடன் இணையும் பிரபல இயக்குனர்.. அப்போ அந்த படமெல்லாம் டீலா.. அடுத்த அப்டேட்டுக்கு வெயிட்டிங்..!!

By admin on ஐப்பசி 13, 2023

Spread the love

அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அசர்பைஜானில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அடுத்த ஆண்டு விடாமுயற்சி படம் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

   

அடுத்ததாக நடிகர் அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் தான் நடிக்க போகிறார் என செய்திகள் உலா வந்தது. ஆனால் அஜித்தின் 63-வது படத்தை அவரது தீவிர ரசிகனான ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்கப் போவதாக தகவல் வெளியானது. இந்த படத்திற்கு நடிகர் அஜித் 170 கோடி ரூபாய் சம்பளம் வாங்க உள்ளதாக கூறப்படுகிறது.

   

 

இதனையடுத்து ரசிகர்களுக்கு அடுத்த சர்ப்ரைசாக அஜித் நடிக்கும் 64-ஆவது படத்தை வெற்றிமாறன் இயக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல இயக்குனரான வெற்றிமாறன், பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, விடுதலை உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார்.

அடுத்ததாக வெற்றிமாறன் விடுதலை பாகம் 2, வாடிவாசல், வடசென்னை பாகம் 2 உள்ளிட்ட படங்களில் கமிட் ஆவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அஜித்தின் 64-வது படத்தை வெற்றிமாறன் இயக்குவார் என்ற செய்திகள் வலம் வருகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.