ஷூட்டிங்குக்கு லேட்டா வந்த உதவி இயக்குனர்.. காரணம் தெரிந்து தல அஜித் செய்த செயல்..

By vinoth

Updated on:

தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னன்களாக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் அஜித். அஜித் தனது ஆரம்ப காலகட்டங்களில் வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்த போது அவருக்கு வெற்றி படத்தைக் கொடுத்தவர் இயக்குனர் வசந்த். அவர் இயக்கிய ஆசை திரைப்படம்தான் அஜித்தின் முதல் சூப்பர்ஹிட் படமாக அமைந்தது.

அதன் பிறகு அவர் நடித்த ஹிட் படங்களில் ஒன்று வான்மதி. அந்த படத்தை அஜித்துக்குப் பின்னாளில் காதல் கோட்டை என்ற சூப்பர் டூப்பர் ஹிட்டைக் கொடுத்த அகத்தியன் இயக்கினார். அந்த படத்தில் அஜித்துக்கு இணையான ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் வடிவுக்கரசி நடித்திருந்தார்.

   

அந்த படத்தில் அஜித்தோடு பழகிய அனுபவங்களை அவர் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். அதில் “ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித் வசனங்களை வாங்கி வைத்து மனப்பாடம் செய்துகொண்டு ஒவ்வொரு மாடுலேஷனில் நடித்துக் கொண்டே இருப்பார். இதே போல ரஜினி சாரும் செய்வதைப் பார்த்திருக்கிறேன்.

அந்த படத்தின் ஷூட்டிங்கின் போது ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது. படத்தின் உதவி இயக்குனர்களில் ஒருவர் தாமதமாக வந்தார். ஏன் தாமதம் என்று கேட்ட போது ‘பஸ்ஸில் வருவதற்கு தாமதமாகி விட்டது’ எனக் கூறினார். உடனே அந்த உதவி இயக்குனருக்கு ஒரு டிவிஎஸ் ஃபிஃப்டி பைக்கை அன்று மாலையே வாங்கிக் கொடுத்தார்.

அதைப் பார்த்து அனைவரும் வாயடைத்துப் போய்விட்டோம். ஆனால் அந்த உதவி இயக்குனரோ எனக்கு பைக் ஓட்ட தெரியாது எனக் கூறிவிட்டார். அதன் பிறகு அவருக்கு ஒரு டிரைவரை போட்டோம்” எனக் கூறியுள்ளார். இதுபோல அஜித் பலருக்கும் உதவி செய்துள்ளதாகவும், அதை வெளியில் தெரியாதவாறு பார்த்துக் கொள்வார் என்றும் வடிவுக்கரசி தெரிவித்துள்ளார்.

இதே போல அஜித் வாலி படத்தின் இயக்குனர் எஸ் ஜே சூர்யாவுக்கும் ஒரு காரை வாங்கிக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.