தற்போது போன வருட பொங்கலுக்கு அஜித்தின் துணிவு படம் வெளியாகி மாபெரும் வெற்றியை கண்டபின், அதற்கடுத்ததாக தடம், கழகத் தலைவன் போன்ற மாபெரும் வெற்றிகளை குவித்த மகிழ்த்திருமேனி அவர்களுடன் இணைந்து “விடா முயற்சி” படத்தில் நடித்து வருகிறார் அஜித். இப்படம் ஒரு வருட காலமாக எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது சில பல பிரச்சனைகளை சந்தித்த இப்படம், படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதில் லைக்கா தயாரிப்பு நிறுவனத்தில் பணப்பற்றாக்குறை பிரச்சினை இருப்பதாலும் ஒரு காரணம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த வருடம் வெளியாக உள்ள இப்படம், இன்னும் படபிடிப்பை முடிக்காத நிலையில் இருப்பதால் ரசிகர்கள் பலரும் ஏமாற்றத்தை சந்தித்துள்ளார்கள். ஆனால் தற்போது யாரும் எதிர்பாராத விதமாக அஜித்தின் 63 வது படம் பற்றி அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறார்கள். திரிஷா இல்லனா நயன்தாரா, AAA போன்ற படங்களில் எடுத்து படு தோல்வியை சந்தித்த ஆதிக்கவிச்சந்திரன் கடந்த ஆண்டு விஷால் மற்றும் எஸ் ஐ சூரியா அவர்களை வைத்து இயக்கிய மார்க் ஆண்டனி படம் யாரும் எதிர்பாராத அளவுக்கு பட்டி தொட்டி எல்லாம் பட்டையை கிளப்பியது.
மாபெரும் வெற்றி அடைந்த பின் ஆதிக்க ரவிச்சந்திரன் அவர்கள் அஜித்தை வைத்து இயக்க உள்ளதாக தகவல் வெளியாகிறது, அதை தொடர்ந்து தற்போது அஜித்தின் விடாமுயற்சி படத்தின் அப்டேட் சரியாக வெளியாகாமல் இருந்த நிலையில், அஜித்தின் 63-வது படத்தின் டைட்டிலை தயாரிப்பாளர் வெளியிட்டு இருக்கிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் மை 3 மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும் படம் தான் “குட் பேட் அக்லி”. தற்போது, ரசிகர்கள் எதிர்பார்க்காத சமயத்தில் இப்படத்தின் டைட்டளை பற்றியும் இப்பட அப்டேட்டை பற்றியும் வெளியிட்டு இருக்கிறார்கள். தற்போது ஆதிக்க ரவிச்சந்திரன் இயக்கத்தில் மாபெரும் வெற்றி அடைந்த மார்க்கண்டினி படத்தில் வில்லனாக நடித்த எஸ் ஜே சூர்யா அவர்கள் தற்போது 17 வருடம் கழித்து அஜித்துடன் இணைகிறார்.
அஜித்தை வைத்து எஸ் ஜே சூர்யா அவர்கள் இயக்குனராக பணிபுரிந்த நிலையில் தற்போது அஜித்துக்கே வில்லனாக நடிப்பது ரசிகர் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இவர்களின் காம்போவில் உருவாகும் இந்த படைப்பை ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நமக்கு உறுதியாக தெரியும். இப்படம் 2025 ஆம் ஆண்டு பொங்கல் சமயத்தில் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.