நான் தமிழ் சினிமாவில் நடிக்க வந்த போது… அஜித் பண்ணின Help… மனம்திறந்த ஜோதிகா…

By admin on ஐப்பசி 8, 2024

Spread the love

ஜோதிகா மும்பையில் பிறந்து வளர்ந்தவர். இவரது தந்தை திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழ் சினிமாவில் பணியாற்றும் நடிகை மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மலையாளம் இந்தி திரைப்படங்களிலும் தோன்றியிருக்கிறார் ஜோதிகா. 1990 மற்றும் 2000-களின் ஆரம்ப கட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜோதிகா.

   

1997 ஆம் ஆண்டு ஹிந்தியில் டித்து அறிமுகமான ஜோதிககா 1999 ஆம் ஆண்டு வாலி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 2000 ஆம் ஆண்டு விஜய்யுடன் இணைந்து குஷி திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் வெற்றி பெற்றது. தொடர்ந்து பூவ்வெல்லாம் உன் வாசம், காக்க காக்க, சந்திரமுகி, மொழி போன்ற அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார் ஜோதிகா.

   

நடிகர் சூர்யாவை காதலித்து வந்த ஜோதிகா 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து சினிமாவில் இருந்து சற்று ஓய்வெடுத்துக்கொண்டார். 2015 ஆம் ஆண்டு 36 வயதினிலே என்ற திரைப்படத்தில் நடித்ததால் மூலம் கம்பேக் கொடுத்த ஜோதிகா அதற்கு பிறகு சிறந்த கதையம்சம் கொண்ட படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி, பொன்மகள் வந்தாள் போன்றவை இவர் சமீபத்தில் நடித்ததில் குறிப்பிட தகுந்தவை ஆகும்.

 

ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட ஜோதிகா அஜித் அவர்களைப் பற்றி பேசியிருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால் நான் தமிழில் முதலில் நடிக்க வரும்போது எனக்கு சுத்தமா தமிழே தெரியாது. அப்போ அஜித் நல்லா ஹிந்தி பேசுவார். அப்போ ஹிந்தி பேசுற ஒரே நடிகர் அஜித் மட்டும் தான். நானும் அவரும் சூட்டிங் ஸ்பாட்ல பேசிக்கிட்டே இருப்போம். அவர் தான் எனக்கு நிறைய கத்துக் கொடுத்தார். அதுக்கப்புறம் நாங்க பேமிலி பிரண்ட்ஸ் ஆயிட்டோம் என்று ஓபனாக பேசியிருக்கிறார் ஜோதிகா.