தமிழ் சினிமாவில் இன்று புகழின் உச்சத்தில் இருக்கிறார்கள் நடிகர்கள் விஜய் மற்றும் அஜித். இதில் அஜித்தை விட கொஞ்சம் அதிகமாகவே விஜய்யின் மார்க்கெட் உள்ளதாக சொல்லப்படுகிறது. தன்னுடைய புகழின் உச்சியில் இருக்கும் விஜய் ரஜினிகாந்தை விட அதிக சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அதற்கேற்றார் போல அவரின் சுமாரான படங்கள் கூட நல்ல வசூலைப் பெற்று வருகின்றன.
தற்போது மாஸ் நடிகராக இருக்கும் விஜய், 90 களில் தனக்கான இடத்துக்காக போராடிக் கொண்டிருந்தார். அப்போது அவரை ஹீரோவாக்கி தொடர்ந்து படங்கள் இயக்கியும் தயாரித்தும் சப்போர்ட் செய்தார். அதனால் அவர் தன்னுடைய இயக்குனர் பணியைத் தியாகம் செய்யவேண்டிய நிலைக்கும் ஆளானார்.
அதே போல விஜய்யின் வெற்றிக்கு இன்னொரு காரணம் எம் ஜி ஆர்- சிவாஜி, ரஜினி –கமல் போல விஜய்- அஜித் என்ற இருமையை உருவாக்கியதும் ஒரு காரணம். அப்போது இருவரும் வளர்ந்து வரும் நடிகர்களாக இருந்த திட்டமிட்டோ திட்டமிடாமலோ அப்படி ஒரு ஒப்பீடு உருவாகிவிட்டது. அதை இருவருமே சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டனர்.

ஒரு காலகட்டத்தில் தங்கள் படங்களிலேயே ஒருவரை ஒருவர் தாக்கி மறைமுக வசனங்கள் பேசி சீண்டிக் கொண்டிருந்தனர். ஆனால் ஒரு கட்டத்தில் இருவரும் பக்குவம் பெற்று அதை நிறுத்தினர். ஆனால் அவர்கள் தொடங்கி வைத்த இந்த மோதல் அவர்களின் ரசிகர்களிடம் இன்னமும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
இந்நிலையில்தான் நடன இயக்குனரும் அஜித்தின் ‘ஏகன்’ படத்தின் இயக்குனருமான ராஜு சுந்தரம் அஜித், விஜய் மேல் வைத்திருந்த மரியாதையைப் பற்றியும் பேசியுள்ளார். அதில் “ஏகன் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தின் பெயர் ஜோசப் என்று வைத்திருந்தோம். அதை டப்பிங்கின் போதுதான் அஜித் சார் கவனித்தார். அதைப் பார்த்துவிட்டு என்னை அழைத்து ‘விஜய்யின் பெயர் ஜோசப். இப்போது வில்லனுக்கு நாம் அந்த பெயரை வைத்தால் அவர் ரசிகர்கள் வருத்தப்படுவார்கள். மீண்டும் ரசிகர்கள் சண்டை வரவேண்டாம். அதனால் அந்த பெயரை மாற்றிவிடுங்கள்” என்றார். அதன்பின்னர் அந்த கதாபாத்திரத்துக்கு ‘சின்னப்பா’ என்று பெயரை மாற்றினோம்” எனக் கூறியுள்ளார்.
