நடிகர் அஜித்குமார் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கும் விடமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் திரிஷா அஜித்துக்கு ஜோடியாக நடிக்கிறார். படத்தின் ஷூட்டிங் அர்பைஜானில் நடைபெற்றது. ஒரு சில காரணங்களால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.
தற்போது விடாமுயற்சி பட ஷூட்டிங்கில் ஓய்வு கிடைத்திருப்பதால் நலமுடன் வீடு திரும்பிய உடனே மீண்டும் பைக்கில் சுற்றுப்பயணத்திற்கு சென்று விட்டார். இது தொடர்பான புகைப்படங்களை மேலாளர் சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அஜித் மத்திய பிரதேச மாநிலத்தில் தனது பயணத்தை தொடங்கினார்.
இதற்கிடையே சென்னைக்கு வந்த அஜித் தனது மகனின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அஜித் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு காதிற்கு கீழே சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
ஏற்கனவே துணிவு பட ஷூட்டிங் பிரேக் கிடைத்த போது அஜித் பைக்கில் சுற்றுப்பயணம் சென்றார். இந்த நிலையில் அஜித் சக ரைடருக்கு பைக் ஓட்டுவது பற்றி சொல்லிக் கொடுக்கும் வீடியோ, அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. தற்போது அஜித் பிரியாணி சமைக்கும் வீடியோவும் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
#AK‘s Travel Vlog Glimpse#Ajithkumar#VidaaMuyarchi #GoodBadUgly
pic.twitter.com/FkZDd5H9j4— Prakash Mahadevan (@PrakashMahadev) March 21, 2024