அந்த பாட்டுல இந்த வரிய கவனீச்சிங்களா..? விஜய்யை அட்டாக் பண்ணி அஜித் படத்தில் இடம்பெற்ற பாடல்…

By vinoth

Updated on:

தமிழ் சினிமாவில் கிட்டதட்ட ஒரே காலகட்டத்தில் அறிமுகமாகி ஒன்றாக வளர்ந்து இன்று உச்சம் தொட்டு இருப்பவர்கள் விஜய்யும் அஜித்தும். ஆரம்பத்தில் இருவரும் ஒன்றாக நடித்தார்கள். அதன் பின்னர் தங்களுக்கான மார்க்கெட்டை உருவாக்கிக் கொள்ள தங்களுக்குள் ஒரு போட்டி இருப்பதை போல கட்டமைத்தார்கள்.

ஒருகட்டத்தில் இவர்களின் போட்டி பர்ஸனல் தாக்குதலாகவும் அமைந்தது. விஜய்யின் புதிய கீதை திரைப்படத்தில் அஜித்தை பற்றி சொல்லப்படும் தல என்ற வார்த்தையை கிண்டலாக்கி விஜய் வசனம் பேசியிருப்பார். அதனால் அப்போது விஜய்க்கும் அஜித்துக்கும் இடையே உரசல் ஏற்பட்டுள்ளதாக கிசுகிசுக்கள் எழுந்தன. இதனால் ரசிகர்கள் இருதரப்பாக பிரிந்து அடித்துக்கொள்ள ஆரம்பித்தார்கள்.

   

இந்நிலையில் விஜய்யைத் தாக்கி அஜித் தன்னுடைய அட்டகாசம் படத்தில் ஒரு பாடலை இடம்பறச் செய்தார். அந்த பாடலில் ” ஏற்றி விடவும்
தந்தையும் இல்லை/ ஏந்தி கொள்ள தாய் மடி இல்லை/ என்னை நானே சிகரத்தில் / வைத்தேன் அதனால் உனக்கென்ன” என்ற வரிகள் விஜய்யை மறைமுகமாக தாக்குவது போல அமைந்திருந்தன. அப்போதே விஜய் ரசிகர்கள் இதுகுறித்து விமர்சனங்களை வைத்தனர். இந்த வரிகள் இயல்பாக இடம்பெற்றதல்ல, வேண்டுமென்றே திட்டமிட்டு வைக்கப்பட்டதுதான் என்று அந்த பாடலுக்கு இசையமைத்த பரத்வாஜ் தற்போது ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.

சமீபத்தில் சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் பேசும்போது “அஜித்தின் அட்டகாசம் படத்தில் வரும் உனக்கென பாடலில் விஜய் அவரின் அப்பாவால் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டு வளர்க்கப்பட்டதை தாக்கும் விதமாக வரிகள் இருக்கும். அது தற்செயலாக அமைக்கப்பட்ட வரிகள் கிடையாது. வேண்டுமென்ற போட்டிக்காக எழுதிய வரிகள் தான். ஒரு வேளை இப்போது அதுபோல பாடல் வரிகள் வெளியாகி இருந்தால் எங்களை எல்லாம் ரசிகர்கள் கிழித்திருப்பார்கள். விஜய்யை நேரடியாக அட்டாக் செய்த பாடல் தான் அது” என பரத்வாஜ் கூறி உள்ளார்.

இப்படி மாறி மாறி தாக்கிக் கொண்ட அவர்கள் ஒரு கட்டத்தில் முதிர்ச்சி பெற்று அதைத் தவிர்த்தனர். ஆனாலும் அவர்களின் ரசிகர்கள் இன்னும் இந்த மோசமான ரசிக மனநிலை கூச்சலில் இருந்து வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.