“முருகாதாஸ் மேல அஜித்துக்கு இன்னும் அந்த கோபம் இருக்கு”- இருவரும் மீண்டும் இணைந்து படம் பண்ணாத காரணம்!

By vinoth on சித்திரை 8, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னன்களாக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் அஜித். அஜித் தனது ஆரம்ப காலகட்டங்களில் வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்த போது அவருக்கு வெற்றி படத்தைக் கொடுத்தவர் இயக்குனர் வசந்த். அவர் இயக்கிய ஆசை திரைப்படம்தான் அஜித்தின் முதல் சூப்பர்ஹிட் படமாக அமைந்தது.

அதன் பிறகு காதல் மன்னன், வாலி, அமர்க்களம் மற்றும் முகவரி என அடுத்தடுத்து ஹிட் படங்களாகக் கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார். ஆனால் அவரை ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக்கியது முருகதாஸின் தீனா திரைப்படம்தான். அந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் பின்னர் தமிழ் சினிமாவில் ஏ ஆர் முருகதாஸ் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராகி பல வெற்றிப் படங்களைக் கொடுத்தார்.

   

ஆனால் இந்த ஹிட் கூட்டணி, அதன்பிறகு மீண்டும் இணையவேயில்லை. அதற்குஅஜித்துக்கு முருகதாஸ் மேல் இருக்கும் கோபமே காரணம் என்று சொல்லப்படுகிறது. அது என்ன கோபம் என்றால் தீனா படத்துக்குப் பிறகு அஜித் அசின் கூட்டணியில் முருகதாஸ் மிரட்டல் என்ற படத்தை இயக்க ஒப்பந்தமானார்.

   

இந்த படத்துக்கான போட்டோஷூட் எல்லாம் நடந்து ஷூட்டிங் வரை சென்றது. ஆனால் அப்போது அஜித்துக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே கருத்து வேறுபாடு எழ அப்போது முருகதாஸ் அஜித் பக்கம் நிற்காமல், தயாரிப்பாளரின் பக்கம் நின்றுள்ளார். அந்த படத்தில் இருந்து அஜித் விலக, அவருக்கு பதிலாக சூர்யாவை வைத்து கஜினி என்ற பெயரில் இயக்கியுள்ளார். அந்த படமும் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.

 

ஆனால் தன்னால் அறிமுகப்படுத்தப்பட்ட இயக்குனர் தனக்கு ஆதரவாக நிற்காமல், தயாரிப்பாளர் பக்கம் நின்றது அஜித்துக்கு கோபத்தை ஏற்படுத்தியதாம். அதனால் இத்தனை ஆண்டுகளாக அவர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் கூட நடிக்காததற்குக் காரணமாம்.  முருகதாஸ் விஜய், சூர்யா, அமீர் கான் என பல முன்னணி நடிகர்களோடு இனைந்து பணியாற்றி முன்னணி இயக்குனராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.