தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து இருப்பவர் அஜித்குமார். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாமல் சினிமாவில் நுழைந்து தனக்கென தனி இடத்தை பிடித்து கெத்தாக இருப்பவர் அஜித்குமார். தனக்கு 17 வயதாக இருக்கும் போது கார் ரேசரில் கலந்துகொண்டு தனது கேரியரை ஆரம்பித்தார். கார் ரேசிங் பண்ணிக் கொண்டிருக்கும்போதே மாடலிங்கும் செய்து வந்தார். அதன் மூலம் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 1990களில் தமிழ் சினிமாவில் அறிமுகமான அஜித்குமார் காதல் மன்னன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திருப்புமுனையை பெற்றார்.

2000 காலகட்டத்திற்கு பிறகு நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்தார் அஜித் குமார். இப்போது நடிகர் அஜித்தின் 62 ஆவது திரைப்படம் தான் விடா முயற்சி. மகிழ் திருமேனி இந்த திரைப்படத்தை இயக்கியுள்ள நிலையில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். வில்லனாக ஆரவ், ஆக்ஷன் கிங் அர்ஜுன், வில்லியாக ரெஜினா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ள நிலையில் படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

இந்தத் திரைப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. இந்த படம் முழுக்க முழுக்க அஜர் பைஜான் நாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்த படக்குழு அதன் அப்டேட்டுகளையும் ஒவ்வொன்றாக வெளியிட்டு வந்தது. சமீபத்தில் கூட டப்பிங் பணிகளை அஜித் முடிந்த நிலையில் தற்போது பின்னணி இசைக்கான பணிகள் நடைபெற்று வருகின்றது.

மேலும் ஹைதராபாத்தில் குட் பேட் அக்லி சூட்டிங் நடந்து முடிந்தது. இப்போது அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருக்கிறார் அஜித். இந்நிலையில் அஜித் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ராஜாவின் பார்வையிலே படத்தில் விஜய், அஜித் இருவரும் நடித்திருந்தார்கள். அஜித் இந்த படத்திற்கென ஒரு ரூபாய் சம்பளம் கூட வாங்கவில்லை என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் இயக்குனர் ஜானகி சௌந்தர் கூறியிருந்தார்.
